ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி வசூல்; நாட்டில் ரூ. 1.50 லட்சம் கோடியைத் தாண்டியது!

 நாடு முழுவதும் 2-வது முறையாக ஜிஸ்எடி வசூல் ரூ. 1.50 லட்சம் கோடியை கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

-இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிவித்ததாவது;

நடப்பு 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,51,718 கோடியாக உள்ளது. இதில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.26,039 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.33,396 கோடியாகவும் உள்ளது.

மேலும் மத்திய மற்றும்  மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.81,778 கோடியாகவும், செஸ் வரி வருவாய் ரூ.10,505 கோடியாகவும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் மூலம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வசூலான ஜிஎஸ்டி தொகைக்கு அடுத்தபடியாக 2-வது அதிகபட்ச வருவாய் அக்டோபரில் கிடைக்கப் பெற்றுள்ளது.

மேலும் தொடர்ந்து 8-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.

மாநிலங்களைப் பொருத்தவரை, ரூ.23,037 கோடி ஜிஎஸ்டி வருவாயை ஈட்டி, அக்டோபர் மாதம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடம் வகிக்கிறது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com