ஏப்ரலில் ரூ.1,87,035 கோடி ஜிஎஸ்டி வசூல்: பிரதமர் மோடி பாராட்டு!

ஏப்ரலில் ரூ.1,87,035 கோடி ஜிஎஸ்டி வசூல்: பிரதமர் மோடி பாராட்டு!

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் இதுவரை இல்லாத அளவாக ரூ.1,87,035 கோடியாக வசூலிக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இது கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத வசூலான ரூ.1,67, 540 கோடியைவிட ரூ.19,495 கோடி அதிகமாகும். ஜி.எஸ்.டி. வசூல் சாதனை இந்திய பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கான மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

வரி விதிப்பு விகிதம் குறைந்துள்ள நிலையிலும் வரி வசூல் அதிகரித்துள்ளது இந்திய பொருளாதாரத்துக்கு மகிழ்ச்சியான செய்தி. ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளது ஒருமைப்பாடு இணக்கத்தின் வெற்றியை காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1,87,035 கோடி. இது கடந்த ஆண்டு வரி வருவாயைவிட ரூ.19,495 கோடி அதிகமானதாகும். அதேபோல கடந்த ஆண்டைவிட வருவாய் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.68,228 கோடி வரி வசூலாகியுள்ளது.

ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வருவாயில், சிஜிஎஸ்டி அளவு ரூ.38,440 கோடி. எஸ்.ஜி.எஸ்.டி. ரூ.47,412, ஐஜிஎஸ்டி ரூ.89,158 கோடி (இறக்குமதி பொருள்களுக்காக வசூலிக்கப்பட்ட ரூ.34,972 கோடியும் இதில் அடங்கும்) மற்றும் செஸ் ரூ.12,025 கோடி (இறக்குமதி

செய்யப்படும் பொருள்களுக்கான ரூ.901 கோடி வரியும் இதில் அடங்கும்).

ஐஜிஎஸ்டியிலிருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ.45,864 கோடியும் எஸ்ஜிஎஸ்டி.க்கு ரூ.37,959 கோடியுமாக தீர்வாகியுள்ளது. வழக்கமான தீர்வுக்குப் பிறகு 2023 ஏப்ரல் மாதம் மத்திய, மாநில அரசுகளுக்கு மொத்த வருவாய் சிஜிஸ்டிக்கு ரூ.84,304 கோடியும், எஸ்.ஜி.எஸ்.டி.க்கு ரூ.85,371 கோடியுமாக இருந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாயைவிட இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வருவாய் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருவாயும் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

முதல் முறையாக ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.75 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com