ரோஸ்லின், பத்மா,முகமது ஷபி
ரோஸ்லின், பத்மா,முகமது ஷபி

கேரள நரபலியின்போது குற்றவாளி எழுதிய ஹைக்கூ கவிதை!

கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பகவல் சிங், 2-வது கொலையின்போது ஹைக்கூ கவிதை எழுதியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 கேரள மாநிலம் திருவல்லா அருகே இலந்தூர் பகுதியை சேர்ந்த ஆயுர்வேத வைத்தியரான பகவல்சிங்கும் அவரது மனைவி லைலாவும் விரைவில் பணக்காரர் ஆக வேண்டும் என்பதற்காக போலி மந்திரவாதி முகமது ஷபி என்பவரின் யோசனையின்படி ரோஸ்லின், பத்மா ஆகிய 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் நேடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் 2-வது கொலை சம்பவத்தன்று பகவல் சிங் பேஸ்புக்கில் ஹைக்கூ கவிதை எழுதியுள்ளது அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பகவல் சிங்கின் பேஸ்புக்கில் 1,100 பாலோயர்கள் இருந்துள்ளனர். அதில் கடைசியாக இவர் அக்டோபர் 6-ம் தேதி அதாவது 2-வது கொலை நடந்தபோது தன் பேஸ்புக்கில் ஒரு  மர்ம ஹைக்கூ கவிதை பதிவிட்டுள்ளார்.

"ஓர் உலை, ஒரு கருமனின் மனைவி வேலை பார்க்கிறார். அந்த பெண்ணின் உடல் வளைகிறது."

-இவ்வாறு பகவல் சிங் பதிவிட்ட அந்த கவிதை, அவரது பேஸ்புக் பாலோயர்ஸ் மட்டுமன்றி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com