இமாச்சல பிரதேச தேர்தல்
இமாச்சல பிரதேச தேர்தல்

#Breaking பரபரப்பாக நடைபெற்றுவரும் இமாச்சல பிரதேச தேர்தல்!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கிய விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 5.30 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி என மும்முனை போட்டி நிலவும் நிலையில் களத்தில் 412 வேட்பாளர்கள் உள்ளனர். மொத்தம் 55 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தை பொறுத்தமட்டில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. டெல்லி, பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் ஆம்ஆத்மியும் இங்கு களம் இறங்கி உள்ளதால் மும்முனை போட்டியாக உள்ளது. இருப்பினும் நேரிடை போட்டி என்பது பாஜக காங்கிரஸ் இடையே தான் இருக்கிறது. பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் மாநிலத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Election
Election

அதன்படி இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போது குளிர் காலம் என்பதால் வாக்குப் பதிவுகாலை 8 மணிக்கு துவங்கியது. துவக்கம் முதலே சில வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தேர்தல் விறுவிறுப்பானது. சில வாக்குச்சாவடிகளில் மக்கள் யாரும் இல்லாத நிலை இருந்தது. இந்த ஓட்டுப்பதிவு இன்று மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

இன்றைய தேர்தல் மொத்தம் 55 லட்சத்து 74 ஆயிரத்து 793 பேர் ஓட்டளிக்க தகுதியானவர்கள். இதில் ராணுவ பணி, மத்திய அரசு பணி உள்ளிட்டவற்றால் 67,532 பேர் சர்வீஸ் வாக்காளர்கள் ஆவார்கள். 55,07,261 பேர் இந்த தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர். அதோடு 2022 ஜனவரி 1 முதல் அக்டோபர் 1 தேதி வரை மாநிலத்தில் 18 வயது நிரம்பிய 43,173 பேருக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் புதிய வாக்காளர்களாக இன்று ஓட்டளிக்க உள்ளனர். ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 1,500 பேர் மட்டுமேஓட்டளிக்க உள்ளனர். வாக்காளர் வசதிக்காக மாநிலத்தில் 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 68 தொகுதிகளிலும் அமைதியானமுறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக 67 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் மற்றும் 11,500க்கும் மேற்பட்ட மாநில போலீஸார் என மொத்தம் 30,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மலை பிரதேசம் என்பதால் வாக்கு சாவடிக்கு மக்கள் வருவதில் சற்று சிரமங்கள் உள்ளது. இதற்காக சில சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com