ரயில்வே
ரயில்வே

ரயில்வே துறைக்கு பயணிகள் சேவைகள் மூலம் இவ்வளவு வருவாயா? ரயில்வே நிர்வாகம் வெளியீடு!

இந்த நிதியாண்டின் 2022 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ரயில்வே துறைக்கு பயணிகள் சேவைகள் மூலம் ரூ.43,324 கோடி வருவாய் கிடைத்துள்ளது.2022-23 ஆம் நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்து மூலம் இந்திய ரயில்வே கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது. இது தொடர்பான விரிவான புள்ளி விவரங்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ரயில்வே நிர்வாக அறிக்கையின்படி, இந்திய ரயில்வே துறைக்கு பயணிகள் சேவைகள் மூலம் ரூ.43,324 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது அதை விட 76 % அதிகமாகும். அதாவது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பயணிகள் சேவைகள் மூலம் ரூ. 24,631 கோடி வருவாய் கிடைத்தது.

INDIAN RAILWAY
INDIAN RAILWAY

முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பிரிவில், 2022 ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை சுமார் 53.65 கோடியாகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 48.60 கோடியாக இருந்தது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் 10 சதவீதம் அதிகமான பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். 2022 ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பிரிவில் இருந்து ரூ.34,303 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.22,904 கோடியாக இருந்தது. இது 50 சதவீதம் கூடுதலாகும்.

முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில், 2022 ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரை முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் மொத்த எண்ணிக்கை 352.73 கோடியாகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 138.13 லட்சமாக இருந்தது. எனவே, இந்தாண்டில் முன்பதிவு செய்யாமல் 155 சதவீதம் கூடுதலாக பயணிகள் பயணித்துள்ளனர்.

2022 ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில் இருந்து ரூ.9,021 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.1,728 கோடியாக இருந்தது. இது 422 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு ரயில்வே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com