நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் - டிமாண்ட் குறைகிறது; கொரானாவுக்கு முந்தைய நிலை திரும்புவதாக ஆய்வறிக்கை!

நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் - டிமாண்ட் குறைகிறது; கொரானாவுக்கு முந்தைய நிலை திரும்புவதாக ஆய்வறிக்கை!

நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு பற்றிய கணக்கெடுப்புகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கொரானாவுக்கு முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடும்போது, சென்ற மாதம் 9 சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இதே மாதங்களில் 20 சதவீதம் தொடங்கி 12 சதவீதம் வரை இருந்து வந்தது.

கடந்த ஓராண்டு காலமாக உள்ள எண்ணிக்கையை ஆய்வு செய்து பார்க்கும்போது ஒவ்வொரு மாதமும் 2 சதவீதம் குறைந்துவருவது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, நூறு நாள் வேலை வாய்ப்பை தவிர்த்துவிட்டு வேறு பணிகளுக்கு செல்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இதை பொருளாதார வளர்ச்சிக்கான குறியீடாக கொள்ள முடியும்.

சமீபத்திய பட்ஜெட்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஏறக்குறைய 13 ஆயிரம் கோடி ரூபாய், நடப்பாண்டில் குறைக்கப்பட்டுள்ளது. நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தை முன்வைத்து மாநில அரசுகள் பல்வேறு பணிகளை திட்டமிட்டிருந்தன.

நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை தொடர்ந்து நடத்த, நடப்பாண்டில் குறைந்தபட்சம் 87 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு தரப்புகளிலிருந்தும் எழுந்தது. ஆனால், 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக டிமாண்ட் தொடர்ந்து குறைந்து வருவதால் நூறு நாள் வேலைவாய்ப்பு பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டையும் 18 சதவீதம் குறைத்திருப்பதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும்போது நூறு நாள் வேலைவாய்ப்புக்கான தேவைகளும் குறைகின்றன.

ஜனவரி 2020ல் 18.87 மில்லியன் வேலை வாய்ப்புகள் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமாக கிடைத்தன. கொரானா தொற்று பரவல் காரணமாக படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 27 மில்லியன் வேலை வாய்ப்புகள் வரை சென்றது. தற்போது ஜனவரி 2023 மாதத்தில் 20.7 மில்லியன் வேலை வாய்ப்புகள் தேவைப்பட்டிருந்தன. ஆகவே, அடுத்து வரும் சில மாதங்களில் கொரானாவுக்கு முந்தைய நிலையை எட்டிவிடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com