இப்படிப்பட்ட பெண்தான் வேண்டும், திருமணம் பற்றி மனம் திறக்கும் ராகுல்!

இப்படிப்பட்ட பெண்தான் வேண்டும், திருமணம் பற்றி மனம் திறக்கும் ராகுல்!

எனக்கு பிடித்தமான, சரியான ஒரு பெண் கிடைத்தால் திருமணம் செய்துகொள்வேன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்று திரட்டும் நோக்கில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

மொத்தம் 3,750 கி.மீ. தொலைவு கொண்ட இந்த யாத்திரை கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, ஹரியாணா, பஞ்சாப், இமாச்சலம் வழியாக ஜம்மு காஷ்மீரில் நுழைந்துள்ளது. இந்த யாத்திரை வரும் 30 தேதி மகாத்மா காந்தி நினைவுநாளில் காஷ்மீரீல் நிறைவடைகிறது.

அவரது இந்த யாத்திரைக்கு கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், நடிகர்கள், விளையாட்டு வீர்ர்கள், அரசியல்

தலைவர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

52 வயதாகும் ராகுல்காந்தி இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஒற்றுமை யாத்திரையின்போது ராகுல் காந்தியிடம் பல சமயங்களில் பேட்டியாளர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளனர். அவ்வப்போது அவர் ஒருபதிலைக் கூறிவருகிறார்.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் பேட்டி ஒன்றை கட்சித் தலைவர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சமீபத்தில் ஒரு பேட்டியில், அவரிடம் எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பப்ட்டது. அதற்கு ராகுல், சரியான ஒருபெண்ணை தேடிக்கொண்டிருப்பதாக பதில் கூறியுள்ளார்.

திருமணத்துக்கு தயாராகி வருகிறீர்களா? இல்லை திருமணமே வேண்டாம் என்று இருக்கிறீர்களா? என்று அவரிடம் கேட்கப்பட்டது.

நான். நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். சரியான ஒரு பெண்ணுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட பெண்தான் வேண்டும் என்று ஏதாவது வரையறை வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, எனக்கு அன்பும், புத்திசாலித்தனமும் நிறைந்த பெண் கிடைத்தால் போதுமானது என்று கூறியுள்ளார். நல்ல பெண் இருந்தால் சொல்லட்டுமா? என்று கேட்டதற்கு, ராகுல் சிரித்துக்கொண்டே “என்னை சிக்கலில் மாட்டிவிடப் பார்க்கிறீர்களா?” என்றார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளிக்கையில், எனது தாய் சோனியா போன்ற குணமும், பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்திபோன்ற துணிச்சலும் நிறைந்த பெண்ணை தேடிக்கொண்டிருப்பதாக கூறியிருந்தார். அந்த விடியோவும் டுவிட்டரில் வெளிவந்தது. அந்த பேட்டியில் இந்திரா எனக்கு இரண்டாவது தாய் மாதிரி என்றும் ராகுல் குறிப்பிட்டிருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com