பிரிஜ் பூஷனின் பாலியல் வன்கொடுமைகளைநேரில் பார்த்தேன்: சர்வதேச நடுவர் அதிர்ச்சி பேட்டி!

பிரிஜ் பூஷனின் பாலியல் வன்கொடுமைகளைநேரில் பார்த்தேன்: சர்வதேச நடுவர் அதிர்ச்சி பேட்டி!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முன்னணி இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கூறியிருக்கும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் உண்மையானவை என்று மல்யுத்த போட்டிகளின் சர்வதேச நடுவர் ஜக்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

2007ம் ஆண்டு முதல் சர்வதேச மல்யுத்த விளையாட்டுகளில் நடுவராக இருந்துள்ள ஜக்பீர் சிங், தில்லி காவல் துறையினரிடமும் மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் பிரிஜ் பூஷன், பல்வேறு தருணங்களில் பெண் வீராங்கனைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தில்லி ஜந்தர் மந்தரில் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதியிலிருந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்ற அறிவுறுத்தலின் படி பிரிஜ் பூஷன் மீது தில்லி போலீஸார்

வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரிஜ் பூஷனைக் கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மே 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழாவின் போது நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது.

இதைத்தொடரந்து ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாகவும் அறிவித்தனர். பின்னர் விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் திகைக் கோரிக்கையின் பேரில் அந்த முயற்சியை அவர்கள் கைவிட்டனர்.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை போராட்டக்குழுவினர் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோரை அழைத்து மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜூன் 15-ஆம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் உறுதி தெரிவித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை நிறுத்திவைப்பதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு நடுவர் ஜக்பீர் சிங் அளித்துள்ள பேட்டியில், "கடந்த 2022, மார்ச் 22-ல் லக்னோவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான பயிற்சியின்போது

பிரிஜ் பூஷன் பெண் மல்யுத்த வீராங்கனையிடம் தகாதமுறையில் நடந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

புகைப்படம் எடுக்கும் நிகழ்வின்போது பிரிஜ் பூஷன் பக்கத்தில் நின்ற வீராங்கனையின் மீது கையை போட்டார். உடனே அவர், அவரின் கையை தள்ளிவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றார். அந்த பெண்ணின் முகபாவனையிலிருந்து விரும்பத்தகாதது ஏதோ நடந்துவிட்டதை நாங்கள் உணர்ந்துகொண்டோம்.

பிரிஜ் பூஷன் மைனர் மல்யுத்த வீராங்கனைகளிடமும் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி நிகழ்வினை ஹோட்டலில் தங்கியிருந்த மைனர் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். இந்த சம்பவங்களை நான் என் கண்ணால் பார்த்தேன். பிரிஜ் பூஷனின் செயல் கொடூரமாக இருந்தது என்று ஜக்பீர் சிங் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com