இந்தியா பாகிஸ்தான் பிரிவினை: 75 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்த அக்கா தம்பி!

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை: 75 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்த அக்கா தம்பி!

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை காரணமாக கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த அக்கா தம்பி இருவரும் தற்போது சமூக வலைத்தளத்தின் உதவியல் மீண்டும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்ட தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மஹிந்தர் கவுரின் மற்றும் ஷேக் அப்துல்லா அஜீஸ் ஆகியோர் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு பிரிவினையால் ஒருவரை ஒருவர் பிரிந்துவிட்டனர். தற்போது மஹிந்தர் கவுருக்கு 81 வயதும், ஷேக் அப்துல்லா அஜீஸ்க்கு  78 வயதும் ஆகிறது. இவர்களுடைய பேரப் பிள்ளைகள் பிரிவினையின் போது பிரிந்த அக்கா தம்பி இருவரையும்  சமூக வலைத்தளம் மூலமாக கண்டுப்பிடித்து தற்போது ஒன்றுச்சேர்த்துள்ளனர்.

81 வயதாகும் மஹிந்தர் கவுர் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவில் இருந்து கர்தார்பூர் வழியாக குருத்வாராவிற்கு பயணம் செய்தனர்.அதேநேரத்தில் 78 வயதான ஷேக் அப்துல்லா அஜீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து கர்தார்பூர் உள்ள குருத்வாராவிற்கு வந்தனர். இந்தியா பாகிஸ்தான் இடையில் உள்ள கர்தார்பூர் குருத்வாரா வழித்தடமானது இந்திய சீக்கிய யாத்ரீகர்களுக்கு தர்பார் சாஹிப்பை பார்வையிட விசா இல்லாமல் வந்து வழிபட சிறப்பு அனுமதியை இருநாட்டு அரசும் வழங்கியுள்ளது.

ஒன்றுப்பட்ட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் வசித்துவந்த பஜன் சிங்கின் குடும்பம் பிரிவினையின்போது பிரிந்தது. இதனால் அஜீஸ் ஆசாத் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் குடிபெயர்ந்தார். அதேநேரம் அவரின் குடும்பத்தினர் மற்றும் உறுப்பினர்கள் பஞ்சாபில் இருந்தனர். தன்னுடைய குடும்பத்தினருடன் இணைவதற்கு அஜீஸ் ஆசார் ஆயிரம் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அது பலன் அளிக்கவில்லை. இதனையடுத்து சமூக வலைத்தளத்தில் மகேந்திரா கவுர் பிரிவினையின்போது காணாமல் போன தன்னுடைய தம்பி அஜீஸ் ஆசாத் குறித்து பேசும் வீடியோ வைரலானது.

இதனை பார்த்த அஜீஸ் ஆசாத் குடும்பத்தினர் தங்கள் உடன்பிறப்புகளை சமூக வலைத்தளம் வாயிலாக கண்டுப்பிடித்தனர். 75 ஆண்டுகளுக்கு பிறகு கர்தார்பூர் குருத்வாராவில் சந்தித்துக்கொண்ட இரு குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். குறிப்பாக தன்னுடைய தம்பி அஜீஸ் ஆசாத்தை பார்த்த 81 வயதான மகேந்திரா கவுர் தன் சகோதரனை மீண்டும் மீண்டும் கட்டிப்பிடித்து கைகளை முத்தமிட்டார். பின்னர், இரு குடும்பத்தினரும் ஒன்றாக கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பை வழிபட்டனர். பின்னர் அருகருகே அமர்ந்து உணவை பகிர்ந்துகொண்டனர். இந்த வீடியோவை PMU Kartarpur Official  பக்கத்தில் வெளியிடப்பட்டது. 75 ஆண்டுகளுக்கு பின் இணைந்த அக்கா, தம்பியின் வீடியோ பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com