இந்திய வங்கித்துறை வலுவாக உள்ளது ! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு!

ஆளுநர் சக்தி காந்ததாஸ்
ஆளுநர் சக்தி காந்ததாஸ்

இந்திய வங்கித்துறை வலுவாக உள்ளது என்றும் , சமீபத்தில் அமெரிக்க வங்கிகள் திவாலால் இந்திய வங்கிகளுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சிலிக்கான் வேலி வங்கி கடந்த வாரம் தனது வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் முடங்கியது, இதனால் ஒட்டுமொத்த ஸ்டார்ட்அப் சந்தையும் அதிர்ச்சி அடைந்தது. இதனால் உலகளவில் வங்கி அமைப்புகளின் செயல்பாடு குறித்த சந்தேகம் எழுந்தது. அதனை தெளிவுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஃபெடரல் வங்கி நடத்திய கருத்தரங்கில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் , இந்திய அரசின் வெளிநாட்டுக்கடன் அளவு கட்டுக்குள் உள்ளது. சர்வதேச அமைப்புகள் வரையறுத்துள்ள அளவுகோளின் படியே இந்தியாவின் கடன் அளவு உள்ளது என்றார்.

Rbi Governor Shaktikanta Das
Rbi Governor Shaktikanta Das

வங்கி அமைப்பின் சரியான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இந்திய வங்கி அமைப்பு வளர்ச்சியடைந்த விதம் மற்றும் அது தற்போது நிலைநிறுத்தப்பட்ட விதத்தினால் வலுவானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையில், 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிப்பு, தொடர்ச்சியாக உலக நாடுகளீன் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியதால், பல நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது.

அந்நாடுகளீன் வெளிநாட்டு கடன் நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி சென்றது. தற்போது 25 சதவீத வளரும் நாடுகளின் பொருளாதார நிலை நெருக்கடியில் உள்ளது . குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் 15 சதவீதமும், ஒட்டுமொத்தமாக 45 சதவீத நாடுகள் வெளிநாட்டு கடன் விகித அளவில் நெருக்கடியை சந்தித்து வருகின்றன என்று கூறிய சக்தி காந்த தாஸ். இந்தியாவில் வங்கி துறையும், பொருளாதாரமும் வலுவாக உள்ளது என்றார்.

அமெரிக்க வங்கிகள் திவாலால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லை 45 % நாடுகள் அதிக வெளிநாட்டுக்கடனை பெற்றுள்ளன. அதிகரித்த வட்டி விகித உயர்வு பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com