மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, டெல்லியில் உள்ள இந்தியப் பள்ளி சடுதியில் காலி!
பள்ளி நிர்வாகத்திற்கு அடையாளம் தெரியாத அனுப்புநர் ஒருவரிடமிருந்து ஒரு மின்னஞ்சலைப் வந்தது. அதில், பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப் பட்டதாக மிரட்டல் இருந்ததால் பள்ளி நிர்வாகம் உடனடியாக அது குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்தனர். புகாரும் பதியப்பட்டது. உடனடியாக செயலில் இறங்கிய டெல்லி காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவினர், நாய்ப் படையுடன் இணைந்து அந்த வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
நவம்பர் 2022 இல் இதேபோன்ற மின்னஞ்சல் அதே பள்ளிக்கு அனுப்பப்பட்டது. அப்போதும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். அச்சுறுத்தல் ஒரு புரளி என்று கண்டறியப்பட்டது, எனப் போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலை 10.49 மணியளவில் அதே விதமாக மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாக காவல்துறை தெரிவித்தது. “பள்ளியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பது தொடர்பான மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது என பிஆர்டி சாலையில் உள்ள இந்தியன் பள்ளியில் இருந்து பிரிஜேஷ் என்பவர் தொலைபேசியில் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் படை படை பிரிவினர் மூலம் முழுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று துணை போலீஸ் கமிஷனர் (தெற்கு) சந்தன் சவுத்ரி கூறினார்.
இச்சம்பவம், குழந்தைகளை உடனே வந்து பள்ளியில் இருந்து அழைத்து பெற்ற பெற்றோர்களிடையே பலத்த பீதியைக் கிளப்பி விட்டது. “அன்புள்ள பெற்றோர்களே, சில எதிர்பாராத பாதுகாப்பு காரணங்களுக்காக, நாங்கள் பள்ளியை சீக்கிரமாக மூட வேண்டியுள்ளது. விவரங்களின்படி உங்கள் வார்டை அழைத்துச் செல்ல தயவுசெய்து ஏற்பாடு செய்யுங்கள்... முன் கேட்... (சுயமாக செல்பவர்களுக்கு)... பின் கேட் (வேன் பயன்படுத்துபவர்களுக்கு). நாளை வழக்கம் போல் பள்ளி தொடங்கும்” என்று பள்ளியிலிருந்து செய்தி வந்தது. இதைக் கண்டதும் பெற்றோர் மிகுந்த அச்சத்துடன் உடனடியாக விரைந்து அவரவர் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றனர் என டெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஒருவழியாக மொத்தப் பள்ளியும் காலியாக அனைவரும் பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.