முதல் AI செய்தி வாசிப்பாளர் லிசா.. இந்தியாவில் அறிமுகம்!

AI anchor lisa
AI anchor lisaIntel

சமீபகாலமாக நாம் AI (அ) Artificial Intelligence அதாவது என்ற வார்த்தையை அதிகமாக கேள்விப்பட்டு வருகிறோம். உலகில் தொழில்நுட்பம் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் மனிதர்களை போலவே இயந்திரங்களை சிந்திக்க வைக்கும் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படக்கூடிய AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மென்பொருட்கள் மற்றும் மின்னணு கருவிகள் அதிகம் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மனித வேலைகளை மிகவும் சுலபமாக்கவே இந்த AI உள்ளது. இது போன்று பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் கடந்த ஜூலை மாதம் 6ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் உள்ள செய்தி நிறுவனமாக ஒடிசா டெலிவிஷன் லிமிடெட் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மாநிலத்தின் முதல் AI செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய ஓடிவி நிர்வாக இயக்குனர் ஜாகி மங்கட் பாண்டா, ஒரு காலத்தில் கணினி என்பது ஆச்சரியமான ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. இப்போது இணையத்தில் பலரும் அதிக நேரங்களை செலவும் செய்ய ஆரம்பித்து விட்டனர். அதனால் தான் தொலைக்காட்சி பத்திரிகை துறையில் வெற்றிகரமாக 25 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள எங்கள் நிறுவனம் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளாரை அறிமுகப்படுத்தியுள்ளது என கூறினார்.

மேலும் AI செய்திவாசிப்பாளர் லிசா பல மொழிகளில் பேசும் திறன் கொண்டிருந்தாலும், தற்போதைக்கு எங்கள் நிறுவனத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு ஒடியா மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் செய்திகளை வழங்குவார். இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற அனைத்து முக்கிய சமூக வலைதளங்களிலும் நீங்கள் இனி லிசாவை காணலாம் என தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com