இந்தியாவில் முதன் முதலில் குழந்தை பெற்ற மூன்றாம் பாலின ஜோடி!

இந்தியாவில் முதன்  முதலில் குழந்தை பெற்ற மூன்றாம் பாலின ஜோடி!

கேரள மாநிலம் கோழிக்கோடு உம்மலத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சஹத்- ஜியா என்கிற மூன்றாம் பாலின தம்பதிகள் . இப்போது இத்தம்பதிகள் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் மூழ்கியுள்ளனர். சஹத் பாசில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியாவர்.. அதேபோல ஜியா பவல் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். சஹத் மற்றும் ஜியா பவல் இருவரும் நம்ப முடியாத நிகழ்வை உலகிற்கு உணர்த்தி உள்ளனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோழிக்கோடு மாவட்டம் உம்மலத்தூரில் தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்.

இந்த தம்பதிகள் இருவரும் சேர்ந்து ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முயற்சி செய்தனர். இதில் உள்ள சட்ட சிக்கல்களை விட அவர்கள் அதிகம் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் இயற்கையான கருத்தரிப்பின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தனர். அதில் ஜியா பெண்ணாகவும், சஹத் ஆணாகவும் கருதப்பட்டு உடல் பரிசோதனைக்குப் பிறகு, இயற்கையான கர்ப்பம் சாத்தியம் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதற்கு சஹத்தின் குடும்பத்தினர், ஜியாவின் சகோதரி, கணவர் மற்றும் பல நண்பர்கள் அவர்களுக்கு கருத்தரிப்புக்கு ஆதரவாக இருந்து வந்தனர். நேற்று கோழிகோடு அரசு மருத்துவமனைக்கு வழக்கம் போல பரிசோதனைக்கு சென்ற நிலையில் திடீரென அவர்களுக்கு குழந்தை பிறந்தது. இச்ச்செய்தி அவர்களது நண்பர் மூலம் சமூகவலைதளத்தில் பதியப்பட்டதையடுத்து பலரும் இந்த தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

இது குறித்து ஜியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம். அவர்கள் எதிர்கால வாழ்க்கையில் பாலினத்தை மாற்றிக் கொண்டாலும், அவர்களின் விருப்பத்துடன் இருப்போம். குழந்தை மதம், ஜாதி, பாலின வேறுபாடு இல்லாமல் வளரட்டுமே” என கூறியுள்ளார்.

ஜியாவின் இந்த பதில் ஒட்டுமொத்த மூன்றாம் பாலின மக்களை உற்சாகத்தை ஒரு நம்பிக்கையினை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சியில் உள்ளார்கள் என்பதையே காட்டுவதாக நெட்டிசன்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com