”இந்தியாவின் திறன் ஒரு தங்கச் சுரங்கம் போன்றது, இங்கு முதலீடு செய்யுங்கள்” - பிரதமர் மோடி வலியுறுத்தல்!

”இந்தியாவின் திறன் ஒரு தங்கச் சுரங்கம் போன்றது, இங்கு முதலீடு செய்யுங்கள்” - பிரதமர் மோடி வலியுறுத்தல்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பசுமை எரிசக்தி வளர்ச்சிக்கு முக்கியமளித்து, மத்திய பட்ஜெட் 2023-24ன் முதல் ஏழு முன்னுரிமைகளில் அதைச் சேர்த்துள்ளார். இது நாட்டின் பசுமையான தொழில்துறை மற்றும் பொருளாதார மாற்றம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விவசாயம் மற்றும் நிலையான எரிசக்தியை ஊக்குவிக்கும்.

தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன், எத்தனால் கலவை, பேட்டரி சேமிப்பு மற்றும் வாகன ஸ்கிராப்பிங் போன்ற பல முதலீட்டு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் 2023 வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார். பசுமை எரிசக்தி குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய வெப்பினார் உரையில் பிரதமர் மோடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியாவின் திறனில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை முதலீட்டாளர்கள் தவறவிடக் கூடாது என்று கூறினார்.

உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இந்தியாவை முன்னணி வீரராக மாற்றும் என்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை தவறவிடக் கூடாது என்றும் அவர் கூறினார்.

“இந்த பட்ஜெட் உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தையில் இந்தியாவை முன்னணி வீரராக மாற்றும். நாடு முழுவதும் எத்தனால் ஆலைகளை அமைப்பது போன்ற வாய்ப்புகளை முதலீட்டாளர்கள் தவிர்க்கக் கூடாது. எலக்ட்ரோலைசர் தயாரிப்பில் நிறைய வாய்ப்புகள் உள்ளன” என்று பிரதமர் வியாழக்கிழமை கூறினார்.

2014 ஆம் ஆண்டு முதல் பசுமை எரிசக்தி சேர்ப்பில் இந்தியா வேகமாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். பெட்ரோலுடன் 10 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கும் காலத்திற்கு முன்பே எட்டப்பட்டுள்ளது. இந்தியாவும் தனது மின் திறனில் 40 சதவீதத்தை புதைபடிவமற்ற எரிபொருட்கள் மூலம் முன்கூட்டியே அடைந்தது.

FAME ll திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் 22.9 கோடி லிட்டர் எரிபொருளையும், 33.9 கோடி கிலோ கார்பன் டை ஆக்சைடையும் குறைத்துள்ளது என்று மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவின் ட்வீட்டிற்கு பதிலளித்த பிரதமர் மோடி, பசுமை ஆற்றல் துறையில் நிலையான வளர்ச்சியை எட்டும் விஷயத்தில் அரசாங்கம் முழு உறுதியுடன் உள்ளது என்றார்.

இந்தியா ஆண்டுக்கு 5 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ளது மற்றும் தேசிய ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் தனியார் துறைக்கு ரூ. 19,000 கோடி ஊக்கத்தொகையை வழங்கியது, இது 2030 க்குள் 500 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பெறுவதற்காக இந்தியா வகுத்துள்ள பெரிய இலக்கின் ஒரு பகுதியாகும்.

வாகனத் துண்டிப்புக் கொள்கையைப் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, இந்த முயற்சிக்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் கீழ் 15 ஆண்டுகள் பழமையான போலீஸ் கார்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பொதுப் பேருந்துகள் உட்பட சுமார் 3 லட்சம் வாகனங்கள் அகற்றப்படும் என்றும் கூறினார்.

“வாகன ஸ்கிராப்பிங் கொள்கைக்காக ரூ.3,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வாகன பரிமாற்றம் முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய சந்தையாக இருக்கும், மேலும் இது பொருளாதாரம் ஒரே இடத்தில் தேங்காமல் சுழற்சி முறையில் அனைத்து மட்டங்களிலும் பரவலாகும் வகையில் ஒரு வட்ட பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும்” என்று மோடி கூறினார்.

மேலும், 2023-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட புதிய கோபர்தன் திட்டத்தின் வாயிலாக 500 புதிய ‘ வேஸ்ட் ஃப்ரம் வெல்த்’ ஆலைகள் அமைக்கப்படும் என்றார். மேலும் கோவர்தன் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.10,000 கோடி முதலீட்டில் 500 புதிய ஆலைகள் அமைக்கப்படும் என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com