இன்புளூயன்சா H3N2 ஆட்டம் ஆரம்பம் - அதிகரிக்கும் காய்ச்சல்; முகக்கவசம்தான் ஒரே ஆயுதம்!

இன்புளூயன்சா H3N2 ஆட்டம் ஆரம்பம் - அதிகரிக்கும் காய்ச்சல்; முகக்கவசம்தான் ஒரே ஆயுதம்!

இன்புளூயன்சா H3N2 வகையைச் சேர்ந்த வைரஸ் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது H1N1 வைரஸிலிருந்து மாறுபாடு அடைந்த புதிய வைரஸ் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் எய்எம்ஸ் இயக்குநர், காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி உள்ளிட்டவை இதன் அறிகுறிளாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

H3N2 வைரஸ் கொரோனோ போல வேகமாக பரவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை கழுவுவதும் அவசியமாகிவிட்டது. வயதானவர்களுக்கு புதிய தடுப்பூசி வருவதற்கும் வாய்ப்புண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளை பாதிக்குமா என்பது இதுவரை தெரியவில்லை. கோடைக்காலம் என்பதால் தாக்கம் குறைவாக இருக்கும் என்கிறார்கள்.

தமிழகத்தில் 'H3N2' வைரஸ் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் இருமல், தொண்டை வலி, உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். இந்தியா முழுவதும் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்தவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.

காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டிருபபதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார். நாளை மறுநாள் 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன.

இதில் சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் 200 வார்டுகளில் 200 முகாம்கள் நடத்தப்படும். காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை காய்ச்சல் பாதித்த மக்கள் முகாம்களுக்கு சென்று பயன் அடையலாம். பொதுவாக வைரஸ் தொற்று ஏற்படுவதால் கூட்டங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முக கவசம் அணிதல் போன்ற சுய கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிப்பது நல்லது என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இது கொரானா இரண்டாவது அலையைப் போல் அமைந்துவிடாமல் இருக்கவேண்டும் என்கிற பீதி மக்களிடையே இருக்கிறது. முகக்கவசம்தான் ஒரே ஆயுதம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com