சர்வதேச குழந்தைப்பருவ புற்றுநோய் தடுப்பு தினம்!

சர்வதேச குழந்தைப்பருவ புற்றுநோய் தடுப்பு தினம்!

ந்த பாதிப்பு வந்தாலும் பயப்படாத நாம் புற்றுநோய் எனத் தெரிந்தால் மட்டும் சற்றே ஆடிப்போவது உண்மைதான். பெரியவர்களுக்கு புற்றுநோய் உண்டாக பல காரணங்கள் இருக்கிறது. ஆனால்குழந்தைகளுக்கு  ஏதுமறியாத பிஞ்சுக்குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படும் நிலை மிகவும் வேதனையைத் தரும்.

       குழந்தைகளுக்கு இந்த கொடிய நோய்பாதிப்பு பெரும்பாலும் சுற்றுச்சூழல் வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் மட்டுமே ஏற்படுவதாக கூறப்படுகிறது. குழந்தைகளுக்கும் பலவகையான வகைகளில் புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டாலும் “லுக்கேமியா” எனும் புற்று நோயினால் தான் பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது ஒன்று முதல் பத்து வயது வரையிலான குழந்தைகளையே அதிகளவில் பாதிக்கிறது. இந்த நோய் பாதிக்கப்படும்   குழந்தைகளின் உடலில் உள்ள  ரத்த அணுக்களின் உற்பத்தியை தடுத்து ஹீமோகுளோபின் அளவை பெருமளவில் குறைத்து உடல்நிலையை சீர்குலைக்கிறது. இந்தக் குழந்தைகளுக்கு செலுத்த அதிக அளவில் ரத்தமும் தேவைப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முறையான மருத்துவ சிகிச்சைகள் அன்பான அரவணைப்புகளுடன், ரத்தம் தானம் செய்பவர்களாலும் இந்தக் குழந்தைகள் ஒரளவு வேதனை மறந்து உயிர் வாழ்கின்றனர் என்பது உண்மை. இது தவிர மத்திய நரம்பு மண்டலத்தில் கட்டிகள், நியூரோபிளாஸ்டோமா போன்ற பல்வேறு வகையான புற்று நோய்களும் குழந்தைகளுக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன என்கிறது மருத்துவ அறிக்கைகள்.  

இந்தியாவில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயிரை பறிக்கும் நோய்களில் புற்றுநோய் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 45 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

***************************************

புற்றுநோய் நிபுணர் டாக்டர் கார்த்திகா:

டாக்டர் கார்த்திகா
டாக்டர் கார்த்திகா

அந்தக் காலத்தில் இந்த ரத்தப்புற்று நோய் என்பது மிகவும் குறைவாக இருந்தது. காரணம் அன்றிருந்த இயற்கையான  வாழ்க்கை முறைகளும்  உணவு முறைகளும்தான். இன்றைய காலத்தில் நாம் அழித்துவிட்ட இயற்கையினால் மாறுபட்ட சூழல்களும் சத்துக்கள் குறைந்த ஆகாரமும் கலப்படம் மிகுந்த துரித உணவுகளும்தான் குழந்தைகள் பாதிக்கப்பட முக்கியக்காரணம். அதுமட்டுமின்றி குழந்தைகள் உடல் வருத்தி வெளியே விளையாடாமல் ஒரே இடத்தில் இருப்பதால் ஏற்படும் உடல் பருமன் போன்ற பிரச்னைகளும் இதற்கு காரணம் எனலாம். இந்த நோய் வராமல் தடுக்க குழந்தைகளுக்கு சத்தான ஆகாரமும் சரியான உடற்பயிற்சியுடன் கூடிய  ஆரோக்கியமும் முக்கியம்.

     இந்த நோய் பாதிப்பு வந்து விட்டால் கட்டாயம் குணப்படுத்த முடியும். அதற்குத் தகுந்த மருந்துகளும் மருத்துவ ஆலோசனைகளும் முறையாகத் தந்தால் கண்டிப்பாக குழந்தைகளை இதிலிருந்து மீட்கலாம். இதற்குத் தேவையான மருந்துவ வசதிகள்  தற்போது உள்ளன, உடன் ஆலோசனைப் பெறவேண்டும் என்ற விழிப்புணர்வு மட்டும் தேவை.   

 ***************************************

லக சுகாதார நிறுவனமானது புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இறப்பு வேகத்தை குறைக்கும் முயற்சியிலும்  இந்த உயிர்க்கொல்லி நோய்க்கு தீர்வு காணும்  நோக்கத்துடனும் செயல்பட்டு வருகிறது. புற்றுநோய் குறித்த முழுமையான புரிதல் இல்லாத குழந்தைப்பருவத்திலேயே சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற காரணங்களால் புற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15ஆம் தேதியை சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தடுப்பு தினமாக அறிவிக்கப்பட்டு மக்களிடையே குழந்தைப்பருவ புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

பொதுமக்களாகிய நாம்  இது போன்ற கொடிய நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளுடன் அவர்களின் பெற்றோருக்கும் அவர்களுக்கு ஆறுதலாக இருப்பதும் அரசு அவர்களுக்கு முறையான மருத்துவ வசதிகளும் சத்தான உணவுகள் கிடைக்க உதவி செய்வதும், அவர்களை நோயின் தாக்கத்திலிருந்து சற்றே விடுவித்து ஆறுதல் அளிக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com