இந்தியாவிலிருந்து வெளியேற ஆரம்பிக்கும் சர்வதேச நிறுவனங்கள்; Work from Anywhere பாதிப்பா?

இந்தியாவிலிருந்து வெளியேற ஆரம்பிக்கும் சர்வதேச நிறுவனங்கள்; Work from Anywhere பாதிப்பா?

இந்தியாவில் தொழில் தொடங்க முன்வரும் சர்வதேச நிறுவனங்களை விட, ஏற்கனவே இந்தியாவில் செயல்பட்டு வரும் கிளையை இழுத்து மூடிவிட்டு இந்தியாவிலிருந்து வெளியேறும் சர்வதேச நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இது குறித்து சமீபத்தில் மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது, பெரு நிறுவனங்களுக்கான விவகாரத்துறை அமைச்சர் இந்திரஜித் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார். அதில் இத்தகைய ஆய்வுக்குறிப்புகளும் தரப்பட்டிருந்தன. அதன் படி சர்வதேச நிறுவனங்கள், இந்தியாவில் புதிய கிளைகள் திறக்கப்படுவது குறைந்து வருவது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் புதிய கிளைகள் திறக்கப்படுவது என்பது 2018 தொடங்கி தொடர்ந்து ஐந்தாண்டுகளாக இறங்கு முகத்தில் இருந்திருக்கிறது. 2018 ஆண்டுக்கு முன் வரை நூற்றுக்கும் அதிகமான சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் கிளை தொடங்கியிருககின்றன. ஆனால், கடந்த ஐந்தாண்டில் கொரானா தொற்றுப் பரவல், பொருளாதார சீர்குலைவு போன்றவற்றில் இதுவே 2022ல் 64 ஆக குறைந்திருக்கிறது.

நடப்பாண்டில் கடந்த இரண்டு மாதங்களில் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே இந்தியாவில் கிளை திறந்திருக்கிறது. இந்தியாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களின் எண்ணிக்கையோ 2 ஆக இருந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கடந்த ஐந்தாண்டுகளில் சர்வதேச நிறுவனங்களின் சார்பில் புதிதாக 470 கிளைகள் திறக்கப்பட்டன. ஆனால், இதே காலகட்டத்தில் மூடப்பட்ட கிளைகளின் எண்ணிக்கையோ 550 ஆக இருந்திருக்கிறது.

2018க்கு முன்னர் இந்தியாவில் புதிய கிளைகள் திறக்கப்படுவதும், ஏற்கனவே செயல்பட்டு வந்த கிளைகள் மூடப்படுவதும சகஜமான விஷயம்தான். ஆனால், 2021 வரை இந்தியாவில் செயல்பட்டு வந்த கிளைகள் மூடப்படுவது, புதிய கிளைகளோடு ஒப்பிடும்போது குறைவாகவே இருந்திருக்கிறது.

2022ல் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. 64 புதிய கிளைகள் திறக்கப்பட்டாலும் 78 கிளைகள் மூடப்பட்டுள்ளன. இதே நிலை, இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்க வாய்ப்புண்டு. இந்தியா மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் இதே நிலை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தாக வேண்டும். குறிப்பாக, சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளோடு ஒப்பிட்டு பார்கக வேண்டியிருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளை பொறுத்தவரை

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் இதை விட மோசமான நிலை இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

ஒரு சில சர்வதேச நிறுவனங்களின் கிளைகள் மூடப்பட்டு சில ஆண்டுகள் செயல்படாமல் வைக்கப்பட்டதுண்டு. பின்னர் அதே கிளை செயல்பட ஆரம்பித்ததும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கோவிட் தொற்று, உக்ரைன்போர், மாறிவரும் பொருளாதாரச் சூழல் காரணமாகவும், ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் என்கிற நிலை ஏற்பட்டிருப்பதாலும் இத்தகைய போக்கு நீடிக்கிறது என்று பாசிடிவ் பார்வைகளும் முன்வைக்கப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com