பெண்களுக்கு கேரள அரசு அறிவித்த மாதவிடாய் விடுமுறை அவசியமா?

பெண்களுக்கு கேரள அரசு அறிவித்த  மாதவிடாய் விடுமுறை அவசியமா?

இந்தியாவில் முதன்முறையாக கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும் ‘மாதவிடாய் விடுப்பு’ வழங்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

இது விடுமுறைகள் புதிதல்ல என்கிறார்கள் நிபுணர்கள்.1992 முதல் பீகார் அரசு, அரசுப் பணிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் சிறப்பு மாதவிடாய் விடுப்பு வழங்க உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறு இருக்க இந்த விடுமுறைகள் குறித்து பேசுகையில் பல்கலைக்கழக விதிகளின் கீழ் 75 சதவீத வருகைக்கு பதிலாக 73 சதவீத வருகையுடன் செமஸ்டர் தேர்வுகளில் மாணவிகளால் பங்கேற்க முடியும் என்கிறார்கள் . மேலும் மாநில உயர்கல்வித் துறை, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவிகளும் 60 நாட்கள் வரை பேறுகால விடுப்பு பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. அடுத்தடுத்து வெளியான இந்த அறிவிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளையும், வரவேற்புகளையும் குவித்து வரும் நிலையில், எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

மருத்துவ ரீதியாகவும் பெண்களுக்கு பிஎம்எஸ் எனப்படும் ப்ரீ மென்சுருவல் சிண்ட்ரோம் இருக்கக்கூடிய பட்சத்தில் கோவம், எரிச்சல் என அவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இது போன்ற சமயங்களில், இந்த விடுப்பை அவர்களுக்கு அவசியமான ஒன்றாக பார்ப்பதே சரி. விடுப்பு எடுத்து கொள்வதும், எடுத்து கொள்ளாததும் அவரவர் தேவையை பொறுத்தது. இதை ஆண் -பெண் சமநிலை, எல்லா பெண்களுக்கும் இந்த விடுப்பு அவசியமா? என்ற கோணத்தில் ஆராய வேண்டியதில்லை என்கிறார்கள் பலர். ஒரு பெண்ணின் ஆரோக்கியம் என்பது அவரின் மனநிலை, உடல்நிலை பொறுத்து அமைவதால் இது மிகவும் வரவேற்கத்தக்க விஷயமா பார்க்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

மாதவிடாய் என்பது ஒவ்வொரு பென்ணுக்கும் அவரது உடல் நலம், ஆரோக்கியம் அடிப்படையில் வேறுபடும். அவரவரின் வலி, இரத்தப்போக்கு பொறுத்து சிலருக்கு விடுப்பு தேவைப்படும், சிலருக்கு தேவைப்படாது. ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் விடுப்பு தேவைப்படும் பட்சத்தில், அது மறுக்கப்படுவதையோ அல்லது கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்படுவதையோ தடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பு நிச்சயம் வரவேற்புக்குரியது என்பது பலரின் கருத்தாக உள்ளது.

மொத்தத்தில் இந்த மாதவிடாய் விடுமுறைகள் என்பது வரவேற்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் இது நடைமுறைக்கு வருமா? என பல பெண்கள் ஆவலாக காத்து கொண்டுள்ளனர் என்பதே நிஜம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com