சூரியனை ஆய்வு செய்யும் ISRO-வின் ஆதித்யா L1 மிஷன்.

சூரியனை ஆய்வு செய்யும் ISRO-வின் ஆதித்யா L1 மிஷன்.

ந்திய  விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஆய்வுப் பணிகள் மார்ஸ் மற்றும் சந்திரனையே நோக்கி இருக்கிறது என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அதில் சூரியனையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பதுபோல இஸ்ரோ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சூரியனின் பல ரகசியங்களை அறிவதற்கு இஸ்ரோவின் 'ஆதித்யா L1' என்ற திட்டத்தின் பணிகள் விரைவில் துவங்கப் படவிருக்கிறது. 

நாம் அனைவரும் பூமியில் ஆடி ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில், நிலவில் தன் கால் தடத்தைப் பதித்தான் மனிதன். இவ்வாறு மனிதன் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கான சான்றுகள் பலதை நாம் பார்த்திருப்போம். சாத்தியமற்ற பல விஷயங்களையும் சாத்தியமானது என மனிதர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கும் நிலையில், சூரியனில் தன் கால் தடத்தைப் பதிக்க இஸ்ரோ தயாராகிவிட்டது. 

சூரியனில் புதைந்திருக்கும் மர்மங்களை அறிய இஸ்ரோவின் கனவுத் திட்டமான ஆதித்யா L1 திட்டத்தின் பணிகளை விரைவில் தொங்கவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இத்திட்டமானது சூரியனின் வெளிப்புறப் பகுதியான கொரோனாவை ஆய்வு செய்து அதன் இயக்கவியல், காந்தப்புல மாறுபாடுகள் பற்றி அறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்துடன் சூரியன் பற்றிய பல தகவல்களையும் கண்டறிய இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

ஆதித்யா L1 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, PSLV XL ராக்கெட் மூலமாக, பூமியிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் உயரத்திலுள்ள LEO எனப்படும் குறைந்த புவி சுற்றுப்பாதையில் ஏவப்படும். இது மொத்தமாக தன்னுடன் 7 பகுதிகளை சூரியனை நோக்கி எடுத்துச்செல்லும் எனக் கூறப்படுகிறது. 

  1. Visible emission line choronagraph:

இது கொரோனா எனப்படும் சூரியனின் வளிமண்டல அடுக்கை படம் பிடிக்கும்.  

  1. Solar Ultraviolet Imaging Telescope: 

சூரியனின் குரோமோஸியர் மற்றும் சூரிய வளிமண்டலத்தின் அடுக்கை சற்று தூரத்திலிருந்தே இது படம் பிடிக்கும். 

  1. Aditya Solar wind Particle Experiment:

சூரியனில் இருக்கும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களின் ஓட்டங்கள் மற்றும் சூரியக் காற்றை அளவிடும். 

  1. Plasma Analyser Package for Adithya: 

சூரியனைச் சுற்றியுள்ள பிளாஸ்மாவை அளவிடும்.

  1. Solar Low Energy X-ray Spectrometer:

சூரியனிலிருந்து வெளிவரும் x கதிர்களை அளவிடும்.

  1. High Energy L1 Orbiting X-ray Spectrometer: 

சூரியனிலிருந்து வெளிவரும் அதிக ஆற்றல் கொண்ட X கதிர்களை அளவிடும். 

  1. Magnetometer:

சூரியனின் காந்தப்புலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடத்தை அளவிடும். 

சுமார் 1500 கிலோ எடையில் உருவாக உள்ள இந்த ஆதித்யா L1 செயற்கைக்கோள், சூரியனின் பல தரவுகளை சேகரித்து, அதனால் பூமிக்கு ஏற்படும் விளைவுகளை நன்கு புரிந்துகொள்ள உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com