ஜம்மு காஷ்மீரில் ஜாக்பாட்... லித்தியம் தாது இருப்புக் கண்டுபிடிப்பு!

ஜம்மு காஷ்மீரில் ஜாக்பாட்... லித்தியம் தாது இருப்புக் கண்டுபிடிப்பு!

ஜம்மு காஷ்மீரில் நாட்டிலேயே முதன்முறையாக 5.9 மில்லியன் டன் லித்தியம் தாது இருப்புக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுரங்க அமைச்சகம் அறிவித்துள்ளது.

லித்தியம் என்பது இன்று உலகமே தேடி அழையும் ஒரு முக்கியக் கனிமம். உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிப்பதில் தீவிரமாக இருக்கும் வேளையில் அதன் பேட்டரியை தயாரிப்பில் முக்கியக் கனிமம் லித்தியம்.தங்கத்தைக் காட்டிலும் லித்தியம் கனிமம் கிடைத்தது மூலம் தொழிற்துறையை மிகுந்த வியப்பில் உள்ளது.

இந்த எலக்ட்ரிக் வாகன யுகத்தில் லித்தியம் பேட்டரிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இதன் விலையும் அதிகரித்துள்ளது. லித்தியம் கனிம இருப்பு உலகளவில் மிகவும் குறைவாகவே இருக்கும் வேளையில் இதன் சுத்திகரிப்பு செலவுகளும் அதிகமாக இருக்கும் காரணத்தால் லித்தியம் உலோகத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன்கள் கொண்ட லித்தியம் (ஜி3) முதன்முறையாக இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது என்று சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் இருக்கும் 51 கனிமத் தொகுதிகளில் லித்தியம், தங்கம் உள்ளிட்ட தாதுக்கள் உள்ளதாகவும், இதை அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் முக்கியமாக லித்தியம் என்பது ஒரு இரும்பு அல்லாத உலோகம் மற்றும் EV பேட்டரிகளில் உள்ள முக்கியக் கூறுகளில் ஒன்றாகும்.

இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 51 கனிமத் தொகுதிகளைக் கண்டுபிடித்துள்ளது. இதில் 5 தொகுதிகள் தங்கம் உள்ளதாகவும், மற்ற கனிமத் தொகுதிகளில் பொட்டாசியம் , molybdenum , அடிப்படை உலோகங்கள் போன்ற பொருட்கள் உள்ளது.

இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு லித்தியம் குறித்து எவ்விதமான அறிவிப்புகளை வெளியிடாத நிலையில் முதல் முறையாக அறிவித்துள்ளது. லித்தியம் சரங்கம், சுத்திகரிப்பு, தயாரிப்பு ஆகியவற்றில் அமெரிக்கா மற்றும் சீனா பெரும் போட்டியை போட்டு வரும் நிலையில் இந்தியாவும் இதில் சேர்ந்துள்ளது.லித்தியம் உலோகம் இந்தியாவில் கிடைத்திருப்பது எலக்ட்ரிக் வாகனத் துறைக்கு முக்கியச் செய்தியாக மாறியுள்ளது.

மேலும் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் தயாரிக்கப்பட்டாலும் அதிகளவிலான லித்தியம் பேட்டரி வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது லித்தியம் தாது இந்தியாவிலேயே கிடைக்கப்பட்டு உள்ள காரணத்தால் இன் இந்திய எலெக்ட்டிவ் வாகனம் மற்றும் லித்தியம் பேட்டரி தயாரிப்பில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது எனலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com