ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் சென்னையில் காலமானார்!

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் சென்னையில் காலமானார்!

ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ. ஏற்கெனவே இவருக்கு உண்டான கொரோனா பாதிப்பின் காரணமாக அவரது நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதனால் அவரை சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தார் அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன். ராஞ்சியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த ஜகர்நாத் மஹ்தோ, நுரையீரல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சில வாரங்களுக்கு முன்புதான் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு அம்மருத்துவமனை மருத்துவர்கள் மாற்று நுரையீரல் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தமது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னையில் சிகிச்சை பெற்ற அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ காலமாகி விட்டார்’ என தெரிவித்து உள்ளார். மேலும் அந்தப் பதிவில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மறைந்த ஜகர்நாத் மஹ்தோவுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருப்பதோடு, ‘ஜார்க்கண்ட் புலி’ எனவும் அவர் ஜகர்நாத் மஹ்தோவுக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com