2 பான் கார்டு வைத்திருந்தால் ரூ. 10 ஆயிரம் அபராதம்! 

2 பான் கார்டு வைத்திருந்தால் ரூ. 10 ஆயிரம் அபராதம்! 

நாட்டில் 2 பான்கார்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக ஒரு கார்டை வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்காவிட்டால், ரூ. 10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய அரசு தெரிவித்ததாவது; 

நாட்டில் 2 பான்கார்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக ஒரு கார்டை வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், வருமானவரிச்சட்டம் 1961 இன் பிரிவு 272B இன் விதிகளின்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 

இவ்வாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது 

இந்தியாவில் நிரந்தர கணக்கு எண் என்றழைக்கப்படும் பான்கார்டை வருமான வரித்துறை வழங்கி வருகிறது. 10 இலக்க எண்களுடன் கூடிய இந்த பிளாஸ்டிக் அட்டை, வருமான வரி கட்டுவது முதல் புதிதாக வங்கிக் கணக்கு துவங்குவது வரை அனைத்துக்கும் அவசியம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இரண்டு பான் கார்டு வைத்திருப்பவர்கள், அதில் ஒன்றை ரத்து செய்வது எப்படி? 

முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளமான https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற தளத்துக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது நேரில் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்று அதற்கான படிவம் வாங்கி பூர்த்தி செய்து கொடுத்து ஒரு பான் கார்டை கேன்சல் செய்யலாம் 

பான் கார்டு கேன்சல் செய்வதற்கான படிவத்தில் நீங்கள் எந்த பான் எண்ணை தொடர்ந்து வைத்திருக்க விரும்புகிறீர்களோ அந்த பான் எண்ணை குறிப்பிட்டு, மீதமுள்ள பான் தகவலை பார்ம் எண் 11 படிவத்தில் நிரப்ப வேண்டும். இந்த படிவத்துடன் ரத்து செய்யப்பட வேண்டிய பான் கார்டை நகலெடுத்து இணைப்பது அவசியம் 

இப்படி இந்த முறையை பின்பற்றி ஒரு பான் கார்டை கேன்சல் செய்யலாம் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com