அக்னிபாத் திட்டத்தில் பெண்களுக்கு வாய்ப்பு: வேலூரில் முகாம்! 

அக்னிபாத் திட்டத்தில் பெண்களுக்கு வாய்ப்பு: வேலூரில் முகாம்! 

இந்திய ராணுவத்தில் அக்னி பாத் திட்டத்தில் திருமணமாகாத பெண் ராணுவ வீராங்கனைகளை சேர்ப்பதற்கான ராணுவ பயிற்சி முகாம் வேலூரிலுள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் நடைபெறுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  

இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:  

இந்திய ராணுவத்தில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான ஆட்சேர்ப்பு வேலூரில் நடைபெறுகிறது. 

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் (காரைக்கால், ஏனம் மற்றும் புதுச்சேரி) மற்றும் அந்தமான், நிக்கோபார் தீவுகள் (நிக்கோபார், வட மற்றும் மத்திய அந்தமான் மற்றும் தெற்கு அந்தமான்) ஆகிய பகுதிகளில் உள்ள திருமணமாகாத மகளிர் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

உள்ளூர் கிராம பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்பப்ட்ட திருமணம் ஆகவில்லை என்ற சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். செப்டம்பர் 7 வரை www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக பெண் தேர்வர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.  

நவம்பர் 1-ம் தேதி முதல் அனுமதி அட்டைகள் இணைய வழியாக வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்வதற்கான தேதி அனுமதி அட்டையில் குறிப்பிடப் பட்டிருக்கும். 

நவம்பர் 1-க்குப்  பிறகு www.joinindianarmy.nic.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பதாரர் அனுமதி அட்டையை அச்செடுத்துக் கொள்ளலாம். பணிசேர்ப்பு நடைமுறை முழுவதும் தானியங்கியாக, நேர்மையானதாக வெளிப்படைத் தன்மையானதாக இருக்கும். முறைகேடுகளில் ஈடுபடுவதை விண்ணப்பதாரர்கள் தவிர்க்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு சென்னை பணிசேர்ப்பு அலுவலகத்தை (தலைமையகம்) 044 25674924 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com