படகில் ஏகே-47 துப்பாக்கிகள்; மகாராஷ்டிராவில் கைப்பற்றல்! 

படகில் ஏகே-47 துப்பாக்கிகள்; மகாராஷ்டிராவில் கைப்பற்றல்! 

மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்காட் கடற்கரையில் ஒரு படகில் ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாவது:

மகாரஷ்டிராவில் ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் அடையாளம் தெரியாத படகு ஒன்றும், ராய்காட் மாவட்டத்தில் உள்ள பரத்கோல் என்ற இடத்தில் ஒரு படகும் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். முன்னதாக ,மும்பையில் இருந்து 190 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீவர்தன் பகுதியில் ஆளில்லா படகு ஒன்று  இருப்பதை கண்டு உள்ளூர்வாசிகள் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அந்த படகுகள் கைப்பற்றப்பட்டு போலீஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போலீசார் தீவிர எச்சரிக்கையுடன் இருக்குமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

படகில் மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அந்த படகு ஆஸ்திரேலிய பிரஜைக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. அந்த படகின் இயந்திரம் கடலில் உடைந்ததாகவும், அந்தப் படகில் இருந்தவர்கள் கொரிய படகு மூலம் மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது  

இவ்வாறு அவர் தெரிவித்தார் 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com