இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி: நாடெங்கும் கொண்டாட்டம்! 

 இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி: நாடெங்கும் கொண்டாட்டம்! 

ஶ்ரீகிருஷ்ணர் அவதரித்த நாளாக இன்று  கிருஷ்ண ஜெயந்தி விழா நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 

கிருஷ்ணர் அவதரித்த இடமாக கருதப்படும் மதுராவில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு பஜனைகள் பாடி கிருஷ்ணரை வழிபட்டனர். 

மேலும் மும்பை, மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்கான் கோயில்களில் சிறப்பு அலங்காரத்தில் ராதா, ருக்மணி சமேத ஶ்ரீகிருஷ்ணனை பக்தர்கள் வழிபட்டனர்.  

டெல்லி துவாரகாவில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நடைபெற்ற மகாபாரத நாடகத்தை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் கண்டு களித்தனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com