டெல்லியில் விவசாயிகள் போராட்டம்! 

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்! 

நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் இன்று போராட்டம் நடத்துகின்றனர். 

இதுகுறித்து  வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்ததாவது; 

நாட்டில் விலைவாசி உயர்வு, விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜந்தர் மந்தரில் இன்று விவசாயிகள் மகா பஞ்சாயத்து எனப்படும் 72 மணிநேர போராட்டம் நடத்த  முடிவு செய்துள்ளோம். இந்த அழைப்பை ஏற்று டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் வந்துள்ளனர். 

இவ்வாறு தெரிவித்தனர். 

இதையடுத்து டெல்லியில் இன்று காலை முதல் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது. டெல்லி ஜந்தர் மந்தரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.அவர்கள் ஜந்தர் மந்தர் மைதானத்தில் தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பி தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்தனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டெல்லி புறநகர் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லைகளான சிங்கு, காசிப்பூர் உள்ளிட்ட பகுதி களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.டெல்லி தலைநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com