பால புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு!

பால புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு!

சாகித்ய அகாடமி வழங்கும் பால புரஸ்கார் 2022-ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. 

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த மாநில மொழிகளில் சிறந்த சிறுகதை மற்றும் கவிதைகளின் தொகுப்புக்கு "பால சாகித்ய புரஸ்கர் மற்றும் யுவ புரஸ்கர் விருதுகள் வழங்கப் படுகின்றன. இவை இந்திய இலக்கிய படைப்பாளிகளை கௌரவிக்கும்  வகையில் மத்திய அரசால் மாநில அளவிலும், தேசிய அளவிலும் வழங்கப்படுகிறது. 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பால புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. மொத்தம் 22 மொழிகளுக்கான சிறுகதைகளுக்கான விருதுகளில் தமிழ் மொழிக்கான விருது எழுத்தாளர் மீனாட்சியின் "மல்லிகாவின் வீடு" என்ற சிறுகதைக்கு 'பால சாகித்யா புராஸ்கர் 2022 விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் 'சாகித்யா யுவ புரஸ்கர் விருது' என்பது சுயசரிதை, சிறு கவிதை என 23 மொழிகளில் எழுதிய எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழிக்கான சாகித்ய யுவ புராஸ்கர் விருது "தனித்திருக்கும் அரளிகளின் மதியம்" எனும் கவிதை தொகுப்புக்காக, எழுத்தாளர் பி. காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

'மல்லிகாவின் வீடு என்ற சிறுகதை எழுதிய எழுத்தாளர் மீனாட்சிக்கு நவம்பர் 14-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்பட உள்ளது. இதேபோல் "தனித்திருக்கும் அரளிகளின் மதியம்" எனும் கவிதை தொகுப்பை எழுதிய பி. காளிமுத்துவிற்கு விருது வழங்கக்கூடிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளுக்கு நினைவு பரிசும், 50,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com