உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பணி ஓய்வு!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பணி ஓய்வு!

இந்திய  உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். அவரைத் தொடர்ந்து நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நாளை பொறுப்பேற்க உள்ளார்.

-இதுகுறித்து மத்திய அரசு செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது;

நாட்டில் உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி நியமிக்கப்பட்ட என்.வி.ரமணாவின் பணிக் காலம் இன்றுடன் (ஆகஸ்ட் 26) முடிவடைகிறது. இதையடுத்துநாளை மறுநாள் (ஆகஸ்ட் 27) உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு. லலித் பொறுப்பேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். யு.யு.லலித்த்தின் பணி காலம் நவம்பர் 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

இன்றுடன் பணி ஓய்வு பெறும் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு டெல்லியில் 6 மாதம் இலவச பங்களா ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com