பட்ஜெட் கூட்டத்தொடரில் கனிமொழி, பழனி மாணிக்கம் - நாடாளுமன்றத்தை தி.மு.க மேடையாக்கிய எம்.பி.க்கள்!

பட்ஜெட் கூட்டத்தொடரில் கனிமொழி, பழனி மாணிக்கம் - நாடாளுமன்றத்தை தி.மு.க மேடையாக்கிய எம்.பி.க்கள்!

டெல்லி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. குடியரசத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்று பேசிவருகின்றன. நேற்று தி.மு.க எம்.பியான கனிமொழியும் பழனி மாணிக்கமும் தமிழில் பேசினார்கள்.

தமிழ், தமிழ்நாட்டின் பெருமைகளோடு பேச ஆரம்பித்த பழனி மாணிக்கம், கீழடி நாகரிகம் தொடங்கி சிந்து சமவெளி நாகரிகம் வரையிலான பண்பாட்டு தொடர்ச்சி பற்றி பேசினார். பின்னர், பா.ஜ.க ஆட்சியில் சாமானிய மக்கள் படும் கஷ்டங்களையெல்லாம் தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்தார்.

கனிமொழி பேசும்போது, 'இந்த நாடு ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால் பா.ஜ.க நினைக்கும் திட்டமெல்லாம் ஒருபோதும் நிறைவேறாது. மாநிலங்களின் உரிமைகளை பறிக்க முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறீர்கள். மக்கள் நல அரசு என்பதற்கும் மக்கள் இலவச திட்டங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மாநில அளவில் சமூக நீதிக்கான மாடல்களை எங்காளல் உருவாக்க முடிகிறது. ஆனால், உங்களால் அதைச் செய்ய முடியவில்லை. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வருகிறார். இதே போன்ற சர்ச்சை மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நீடிக்கிறது.

மாநில ஆளுநர்கள் மத்திய அரசின் கருவியாக பயன்படுத்தப்படுகின்றனர். ஆளுநர்களுக்கு தனிப்பட்ட எந்த விருப்ப உரிமையும் இல்லை. ஆளுநரின் அதிகாரம் குறித்து அரசியல் சாசன வடிவமைப்பில் அம்பேத்கர் தெளிவாக கூறியுள்ளா். கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்துவத்தை ஆளுநர்களுக்கு உணர்த்த வேண்டும்.

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரப்போவதில்லை என்பதால் குடியரசு தலைவர் உரையில் திருவள்ளுவரை மறந்துவிட்டார். சுமார் 4 கோடி இந்திய இளைஞர்கள் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். எங்களது பரிந்துரைகளை மத்திய அரசு காது கொடுத்து கேட்பதில்லை. சட்டங்கள் பற்றி விவாதம் செய்ய நேரம் ஒதுக்குவதில்லை என்று பேசியிருக்கிறார்.

கனிமொழியும் பழனி மாணிக்கமும் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட விஷயங்களெல்லாம் தி.மு.க மேடையில் பலமுறை பலரால் பேசப்பட்டுவிட்டன. பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட்டை பற்றி பேசாமல் மற்ற விஷயங்களைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்கிறார்கள் என்கிறது கமலாலய வட்டாரம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com