கர்நாடக சட்டமன்றத் தேர்தல் - சீதாராமையா vs எடியூரப்பா மோதல்! என்னை யாரும் அழிக்க முடியாது, சீதாராமையா சவால்!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் - சீதாராமையா vs எடியூரப்பா மோதல்! என்னை யாரும் அழிக்க முடியாது, சீதாராமையா சவால்!

பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் எப்போது பேசினாலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையே பேசி வருகிறார்கள். திப்பு சுல்தான் பற்றியும் அவரது சித்தாந்தங்கள் பற்றியும் பேசுபவர்கள் ஏன், சாவர்க்கர் பற்றி பேசுவது இல்லை என்று முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சீதாராமையாககேள்வி எழுப்பியிருக்கிறார்.

சென்ற வாரம், கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல், திப்புசுல்தான் பற்றி பேசியது கர்நாடக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. திப்பு சுல்தான் ஆட்சியில் ஆயிரக்கணக்கானோர் கட்டாயப்படுத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டார்கள். திப்பு சுல்தானின் வழி வந்தவர்களை விரட்டியடித்து காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசியிருந்தார்.

திப்பு சுல்தானின் வாரிசு என்று குறிப்பிட்டது காங்கிரஸ் கட்சிக்காரர்களை உசுப்பிவிட்டது. 2015ல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது திப்பு சுல்தான் பிறந்தநாளை அரசுவிழாவாக விமரிசையாக கொண்டாடியது. அன்று முதல் சீதாரமையாவை திப்புசுல்தானின் வாரிசு என்று பா.ஜ.கவினர் குறிப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

'இதெல்லாம் பா.ஜ.கவின் வெறுப்பு அரசியல். என்னை ஒழித்துவிடுவோம் என்கிறார்கள். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. என்னை இஸ்லாமியர்களக்கு ஆதரவானவன் என்கிறார்கள். நான் அனைத்து சாதி, மதங்களுக்கும் அப்பாற்பட்டவன். மோடி, அமித்ஷாவெல்லாம் 100 முறை கர்நாடகத்திற்கு பிரச்சாரம் செய்ய வந்தாலும் காங்கிரஸ் பெறப்போகும் வெற்றியை யாரும் தடுத்து விட முடியாது' என்கிறார், சீதாராமையா

சீதாராமையாவை சமாளிக்கும் பொறுப்பு, பா.ஜ.க தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவுக்கு தரப்பட்டிருக்கிறது. நான் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன். பா.ஜ.கவை ஆட்சிக்குக் கொண்டுவருவதே என்னுடைய லட்சியம் என்று எடியூரப்பா தெளிவாக அறிவித்திருக்கிறார்.

'ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்த்தால் கர்நாடாக தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று தவறாக நினைக்கிறார்கள். சித்தராமையா வெற்றி பெற்ற தொகுதியை விட்டுவிட்டு ஏன் வேறு தொகுதியில் போட்டியிட நினைக்கிறார்? தோல்வி பயமா? துணிச்சல் இருந்தால் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியிலேயே திரும்பவும் போட்டியிட்டு, வெற்றி பெற்று காட்டவேண்டும்' என்கிறார், எடியூரப்பா.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் 300 பேட்டிகள், அறிக்கைகள் வந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com