எம்.பி ஜோதிமணி
எம்.பி ஜோதிமணி

கரூர் எம்.பி.யை காணோம்.. கண்டால் வரச் சொல்லுங்க: வைரலாகும் போஸ்டர்கள்!

சமூக வலைத்தளங்களில் ‘’கரூர் எம்.பி.யைக் காணவில்லை.. கண்டா வரச் சொல்லுங்க’’ என்கிற போஸ்டர் வைரலாகி வருகிறது.

கரூர் தொகுதிக்கான கனகிரஸ் எம்.பி ஜோதிமணி தற்போது, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடத்தி வரும் ‘பாரத் ஜோடோ’ நடைபயணத்தில் பங்கு கொண்டுள்ளார்.

ஆனால் அந்த யாத்திரைகளின் போது எடுக்கப்படும் புகைப்படம் எதிலும் ஜோதிமணி கான்ப்பெறாததால், ‘கரூர் எம்.பி.யை காணவில்லை’ என்ற போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தனது நடை பயணத்தில் கரூர் எம்.பி-யான ஜோதிமணி உள்ளிட்ட கட்சிக்காரர்களியும் இணைத்து கொண்டு செல்கிறார்.

அந்த வகையில் ராகுல்காந்தி நடுரோட்டில் தண்டால் எடுத்தது, சிறுவனுடன் கை கோர்த்து நடந்து சென்றது, சாட்டையால் தன்னை தானே அடித்துக் கொண்டது என பல சுவாரசிய சம்பவங்கள் சமூக வலைதளங்களில் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் கரூர் எம்பியான ஜோதிமணியை இந்த நடைபயணத்தில் எங்கும் காணமுடியாததால், அவரைக் காணவில்லை என்றும், "கண்டா வரச் சொல்லுங்க... கையோடு கூட்டி வாருங்க..." என்று வாசகங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே காங்கிரஸில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் வகையில் ஜோதிமணி குறித்த இந்த சர்ச்சை போஸ்டர், அரசியல் கட்சி வட்டாரங்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com