சசி தரூர்
சசி தரூர்

சசி தரூருக்கு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ஆதரவு!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூர் சிறந்த தேர்வு என ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சைபுதீன் சோஸ்  தெரிவித்துள்ளார்.

-இதுகுறித்து சைபுதீன் சோஸ் தெரிவித்ததாவது:

சசி தரூர் சிறந்த படிப்பாளி மற்றும் பரந்த உலக கண்ணோட்டம் கொண்டவர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர் மிகச் சிறந்த தேர்வு!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தி குடும்பததைச் சேராதவர்கள் தலைமை பொறுப்பு வகிப்பது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் பி.வி., நரசிம்ம ராவ் மற்றும் சீதாராம் கேசரி ஆகியோர் காங்கிரஸ் தலைவர்களாக இருந்துள்ளனர்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு தேர்தல் நடத்தப்பட்டாலும் ராகுல் காந்திதான் மக்களை ஈர்த்து வருகிறார். அவரின் நடை பயணம் காங்கிரஸிற்கு புத்துயிர் அளித்துள்ளது.

–இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com