கேரள பட்ஜெட் - கம்யூனிஸ்ட் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய வரிகள், மேக் இன் கேரளாவை எதிர்த்து போராட்டக் களத்தில் இறங்கிய காங்கிரஸ்!

கேரள பட்ஜெட் - கம்யூனிஸ்ட் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய வரிகள், மேக் இன் கேரளாவை எதிர்த்து போராட்டக் களத்தில் இறங்கிய காங்கிரஸ்!

சென்ற வாரம் கேரள மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மேக் இன் கேரளா முக்கியமான ஹைலைட்டாக இருந்தது. கேரள மாநில நிதியமைச்சர் கே.என். பாலகோபால் இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். கேரளாவில் நிதி நெருக்கடி பிரச்சினை தொடரும் நேரத்தில் பட்ஜெட் அறிவிப்புகள் கைகொடுக்கும் என்று ஆளுங்கட்சி எதிர்பார்த்திருந்தது.

மேக் இன் கேரளாவுக்கு ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் அறிவித்தபோது சகல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் கிடைத்தன. ஆனால், ஏற்கனவே நிதி பிரச்னையால் தவிக்கும் மாநிலத்தில் எங்கிருந்து நிதி கிடைக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்புகளை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டக்களத்தில் குதித்திருக்கிறார்கள்.

பட்ஜெட்டில் ரூ.3 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. சொத்து வரி உள்ளிட்ட பல வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. வரி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் போராட்டத்தில் இறங்கினார்கள். கடந்த 4 நாட்களாக போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானத்துக்கான செஸ் வரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்பது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கோரிக்கை. ஆளுங்கட்சியோ எடுத்த முடிவில் உறுதியாக நிற்கிறது. பட்ஜெட் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது அரசு மறுத்துவிட்டது.

மாநிலத்தில் 62 லட்சம் பயனாளிகளுக்கு தரப்படும் மாதாந்திர சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் தடையின்றி வழங்கப்படுவதற்கு வரி உயர்வு உதவி செய்யும் என்றார். மதுபான விற்பனை மீதான செஸ் வரி விதிப்பையும் ஆதரித்து பேசிய நிதியமைச்சர், கடந்த இரண்டு ஆண்டுகளாக வரி உயர்த்தப்படவில்லை என்பதால் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

வரி உயர்வு என்பது தவிர்க்க முடியாது. வரி விகிதங்களை மாற்றியமைக்காமல் மாநிலம் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்க முடியாது என்று பேசிய நிதியமைச்சர், எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், சட்டசபை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர், இன்று வரை தொடர் போராட்டத்தில் இருந்து வருகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் கேரளாவில் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட கட்சியும் எதிரும் புதிருமாக மோதிக்கொள்ளுவதை காங்கிரஸ் மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டங்கள், கேரளாவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் என்று நினைக்கிறது. தமிழ்நாட்டில் ஒரே கூட்டணியில் உள்ள கட்சிகளாக காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் மோதிக்கொள்வது தமிழ்நாட்டில் மட்டுமே ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com