நெய்யாறில் லயன் மினி சஃபாரி பூங்கா அமைக்க கேரள அரசு பரிசீலனை!

நெய்யாறில் லயன் மினி சஃபாரி பூங்கா அமைக்க கேரள அரசு பரிசீலனை!

நெய்யாறில் மினி சஃபாரி பூங்கா அமைக்க கேரள அரசு பரிசீலித்து வருகிறது.

இதற்கான அனுமதி கோரி மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தை அணுகுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராயும் என்று வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

திருவனந்தபுரம்: தற்போது பழுதடைந்துள்ள நெய்யாறு வனவிலங்கு பூங்காவை மினி சஃபாரி பூங்காவாக மாற்றுவது குறித்து மாநில அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கான அனுமதி கோரி மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தை அணுகுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராயும் என்று வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

எம்எல்ஏ சி கே ஹரீந்திரன் சம்ர்பித்த அறிக்கைக்குப் பதிலளித்த அமைச்சர், 2021 ஆம் ஆண்டு போதிய நிலப்பரப்பு இல்லாததால் சிங்க சஃபாரி பூங்கா என்ற அந்தஸ்தை இழந்ததாக சபையில் தெரிவித்தார். 2021 டிசம்பரில் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் நெய்யாறு வனவிலங்கு பூங்காவின் செயல்பாட்டை நிறுத்துவதற்கான உத்தரவை பிறப்பித்தது என்றார். விதிமுறைகளின்படி, பூங்கா செயல்படுவதற்கு 20 ஹெக்டேர் பரப்பளவு தேவை. தற்போது 4 ஹெக்டேர் நிலம் மட்டுமே உள்ளது. இருப்பினும், நெய்யாறு நீர்த்தேக்கத்தில் உள்ள ஒரு தீவில் பூங்கா அமைந்துள்ளதால், பரப்பளவை அதிகரிப்பது நடைமுறையில் இருக்காது.

பூங்காவை லயன் சஃபாரி பூங்காவாக மீண்டும் நிறுவுவதற்கு வனத்துறை சாதகமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. பூங்கா அதன் அந்தஸ்தை இழந்ததால் சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பு மற்றும் பெரும் வருவாய் இழப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆணையத்தின் விசாரணைக்கு நேரடியாக ஆஜராக திருவனந்தபுரம் வனவிலங்கு காப்பாளரை வனத்துறையினர் அனுப்பி வைத்தனர். இருப்பினும், ஆனாலும், அதன் உத்தரவு திருத்தப்படாது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

“தற்போது தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் கட்டுமான நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக பிப்ரவரி 8-ம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவின்படி மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று அமைச்சர் கூறினார்.

சமர்ப்பிப்பு மூலம் இந்தப் பிரச்சினையை எழுப்பிய ஹரீந்திரன், பூங்காவின் வருமானம் வெகுவாகக் குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். தினக்கூலி தொழிலாளர்களின் நிலை பரிதாபமாக உள்ளது என்றார். லயன் சஃபாரி பூங்காவை விரிவுபடுத்த அதிக நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்று ஹரீந்திரன் மேலும் தெரிவித்தார். "கிர் தேசிய பூங்காவில் இருந்து இரண்டு சிங்கங்களை வரவழைத்து பூங்காவை மினி சஃபாரி பூங்காவாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிச்சயமற்ற நிலை...

இந்தப் பூங்கா, 2021 ஆம் ஆண்டில், போதிய நிலப்பரப்பு இல்லாததால், லயன் சஃபாரி பூங்கா அந்தஸ்தை இழந்தது

விதிமுறைகளின்படி, பூங்கா செயல்படுவதற்கு 20 ஹெக்டேர் பரப்பளவு தேவை. தற்போது 4 ஹெக்டேர் நிலம் மட்டுமே உள்ளது.

இது நெய்யாறு நீர்த்தேக்கத்தில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ளதால், பரப்பளவை அதிகரிப்பது நடைமுறையில் சாத்தியப்படாது. எனவே இந்த திட்டம் செயல்படுத்தப் படுவதற்கான நிச்சயமற்ற சூழலே தற்போது நிலவி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com