மேக்ரோமேன் எம்-சீரிஸின் புதிய விளம்பரத் தூதராக கேஜிஎஃப் ஸ்டார் யஷ் நியமனம்!
மேக்ரோமேன் எம்-சீரிஸ் இன்னர்வேர் நிறுவனத்தின் புதிய பிராண்ட் அம்பாஸடர் ஆகியிருக்கிறார் கேஜிஎஃப் ஸ்டார் யஷ்.
கேஜிஎஃப் 1&2 படங்களின் சூப்பர் டூப்பர் வெற்றிகளுக்குப் பிறகு யஷ் ஒரு பான் இந்தியர் ஸ்டார் ஆகி விட்டார். அதனால் அவருக்கான விளம்பர வாய்ப்புகளும் மொழி பேதமின்றி அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்பதோடு சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள பிரபலமான லைஃப்ஸ்டைல் நிறுவனங்களில் பல யஷ் ஐ தங்களது விளம்பரத் தூதுவராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த முயற்சியில் சமீபத்தில் யஷ் உடன் ஒப்பந்தம் செய்திருக்கும் நிறுவனமான மேக்ரோமேன் எம் சீரிஸ், அத்லீஷர், ஸ்போர்ட்ஸ்வேர், தெர்மல் உடைகள் மற்றும் சாக்ஸ் வகைகளில் முன்னணி லைஃப்ஸ்டைல் நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது
பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து யஷ் கூறுகையில், “எனது விருப்பங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன் அத்துடன் மேக்ரோமேனின் தைரியமான மற்றும் அச்சமற்ற நிலைப்பாடு எனக்குப் பிடிக்கும். ஃபேஷன் உலகில் தனிப்பட்ட அதாவது கஸ்டமைஸ் செய்யப்பட்ட பிரத்யேக உடைகள் தயாரிக்கும் நிறுவனங்களின் வரிசையில் மேக்ரோமேன் எம்-சீரிஸ் குழுமமானது கவர்ச்சிகரமானதாக இருப்பதாக நான் நினைக்கிறேன் .
ஆடை உலகில் இவர்களது படைப்புகள் தரமானது என்பதோடு, ஸ்டைலானதாகவும் இருக்கிறது. அத்துடன் அவை அனைத்துமே அணிந்து கொள்ள வசதியானதும் கூட. விற்பனைக்காக மதிப்புகள் மற்றும் கொள்கைகளில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் வடிவம் மற்றும் அணியும் பாணியில் அசல் தன்மையைக் கொண்டதாகவும் இருக்கிறது; என்னைப் பொருத்தவரை இது ஒரு சிறந்த தேர்வு. அதனுடைய பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டிருப்பதால் 'ஒரு மேக்ரோமேன் போல வாழ்வதில் எனது சிறந்த நேரத்தைச் செலவிடுவேன்." - என்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
பிராண்ட் இயக்குநரான விகாஷ் அகர்வால் பேசும் போது, “லைஃப்ஸ்டைல் மற்றும் ஃபேஷன் பிராண்டாக, மேக்ரோமேன் எம்-சீரிஸ் இந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தரம், துணி மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உண்மையிலேயே உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. "அதேபோல், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தனித்துவமான வாழ்வில் "ஒரு மேக்ரோமேன் போல வாழ" ஊக்குவிக்கும் பிரச்சாரங்களை நாங்கள் உருவாக்குகிறோம். எங்களின் புதிய மேக்ரோமேனாக யாஷை வரவேற்பதில்
மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் வரும் ஆண்டுகளில் நாங்கள் ஒன்றாக இணைந்து வளரும்போது ஒரு சிறந்த சங்கத்தை எதிர்பார்க்கிறேன்,” என்று அகர்வால் கூறினார்.
இந்த பிராண்டின் விளம்பரத் தூதுவர்களாக இதற்கு முன்பு ஹிருத்திக் ரோஷன் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.