அமித் மாளவியா - ராகுல் காந்தி
அமித் மாளவியா - ராகுல் காந்தி

'லட்கே ஜட்கே' சர்ச்சை!

அமேதி ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடத் தயாரா? என்று கேட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பா.ஜ.க. சவால் விடுத்துள்ளது.

பா.ஜ.க. பிரமுகர் அமித் மாளவியா, '2024 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிடுவேன். மேலும் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட மாட்டேன் என்று ராகுல் அறிவிக்கத் தயாரா?' என்று கேட்டு சவால் விடுத்துள்ளார்.

(கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி, அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இருதொகுதிகளில் போட்டியிட்டார். அமேதியில் அவர், ஸ்மிருதி இரானியிடம் தோற்றுப்போனார்.)

அமேதி தொகுதி எம்.பி.யும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி அவ்வப்போது தொகுதி பக்கம் வந்துவிட்டு போவார் (“லட்கே ஜட்கே”) ,வேறு எதுவும் செய்யமாட்டார். அமேதி எங்கள் கோட்டைதான் என்று கூறி காங்கிரஸ் பிரமுகர்களில் ஒருவரான அஜய் ராய் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பா.ஜ.க.வின் அமித் மாளவியா, ராகுலிடம் இந்த சவாலை விடுத்துள்ளார்.

ராகுல் உண்மையிலேயே தைரியம் உள்ளவராக இருந்தால் 2024 தேர்தலில் அமேதி தொகுதியில் மட்டும் போட்டியிடுவதாக அறிவிக்கட்டும். அதற்கு அவர் தயாரா என்றும் மாளவியா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே ஸ்மிருதி இரானியை தாம் எந்தவிதத்திலும் ஆபாசமாக விமர்சிக்கவில்லை என்றும் எங்கள் பகுதியில் பயன்படுத்தும் வார்த்தைகளையே (லட்கா-ஜட்கா) நான் குறிப்பிட்டேன் என்றும் சிலர் திடீரென தொகுதிக்கு வருகிறார்கள்; எதையாவது பேசிவிட்டு சென்றுவிடுகிறார்கள் என்ற அர்த்த்த்தில்தான் அப்படி கூறினேன் என்றும் அஜய் ராய் விளக்கம் அளிக்க,

“லட்கே-ஜட்கே” என்பது அனைவரும் பயன்படுத்தும் வார்த்தை அல்ல. இந்தியாவில் குறிப்பாக உ.பி.யில்  மக்கள் எப்படிப் பேசுவார்கள் என எனக்குத் தெரியும். ஒருவரை இழிவுபடுத்தி ஆபாசமாகப் பேசுவது காங்கிரஸின் கலாசாரம் ஆகும். அதைத்தான்  அஜய் ராய் பிரதிபலித்துள்ளார். மேலும் சோனியா, ராகுலின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றே அவர் அப்படி பேசியுள்ளார் என இரானி பதிலடி கொடுத்திருந்தார்.

தேசிய மகளிர் ஆணையமும் ராயின் அநாகரீக பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்ததுடன். நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோரியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com