சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

சுங்கச்சாவடி தொழிலாளர்கள் பணி நீக்கம்: ஐந்தாவது நாளாக ஊழியர்கள் போராட்டம்!

நாடு முழுவதும் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நடத்தப்படும் சுங்கச்சாவடிகள் ஏராளமாக உள்ளன. இவற்றின் மூலம் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு தினம் தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் முன்னறிவிப்பின்றி 58 தொழிலாளர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

சுங்கச்சாவடியில் பணிபுரிந்த 58 தொழிலாளர்களை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, பணிநீக்கம் செய்ததைக் கண்டித்து ஐந்தாவது நாளாக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்களின் போராட்டத்தால் நான்கு கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்
சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் சிலர் இங்கு பத்து ஆண்டுகளாக வேலைப் பார்த்து வருகிறார்கள். இந்த தொழிலை நம்பித்தான் பலரின் குடும்பம் இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் எந்த வித அறிவிப்பும் இன்றி திடுப்திப்பென்று தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது எந்தவிதத்தில் நியாயம்.

தொழிலாளர் சட்டப்படி ஒருவரை வேலைவிட்டு நீக்கவேண்டுமென்றால் சம்மந்தப்பட்டவர்களுக்குத் தகவல் சொல்லவேண்டும். . இதனைக் கண்டித்து ஐந்து நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரையிலும் போராடுவோம் என்கின்றார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com