ராஜஸ்தானில் லித்தியம் கண்டறியப்பட்ட செய்தி ஆதாரமற்றது - இந்திய புவியியல் ஆய்வு மையம்!
இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) செவ்வாயன்று ராஜஸ்தானில் பெரிய அளவில் லித்தியம் இருப்புக்கள் அடையாளம் காணப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் "அடிப்படையற்றவை" என்று அறிவித்திருக்கிறது.
ராஜஸ்தானின் நகெளர் மாவட்டத்தில் உள்ள தெகானா பகுதியில் பெரிய அளவில் லித்தியம் இருப்பு இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்திருப்பதாக பல்வேறு செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை என்று தெரிவித்துள்ளது.
"பிராந்திய தலைமையகம் அல்லது GSI யின் மத்திய தலைமையகம் இது போன்ற எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்று கூற வேண்டும்" என்று அது தெரி வித்திருக்கிறது .
"ராஜஸ்தானின் நகெளர் மாவட்டத்தில் உள்ள தெகானா பகுதியில் 2019-20 ஆம் ஆண்டு முதல் டங்ஸ்டன், லித்தியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற அரிய தனிமங்களின் இருப்பைக் கண்டறிவதற்கான ஆய்வுகளை ஜிஎஸ்ஐ மேற்கொண்டு வருவதாகவும், அதற்கான தோண்டும் பணி இன்னும் முன்னேற்றத்தில் உள்ளது என்றும் அது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், "தோண்டும் பணிகள் நிறைவுற்று தனிமங்களின் இருப்பு கண்டறியப் பட்டதற்கான உறுதியான அறிக்கையை இறுதி செய்த பின்னரே ஆதாரங்கள் நிறுவப்படும்."
- என அறிவித்திருக்கிறது.
ஆனால், முன்னதாக, ராஜஸ்தானின் சுரங்கத் துறை அமைச்சர் பிரமோத் பயா, அதே நாளின் முற்பகுதியில் “சமீபத்தில், ஜம்மு-காஷ்மீரை விட அதிக அளவில் லித்தியம் இருப்பு உள்ளதாக, நகௌரின் தெகானா தாலுகாவில் ஜிஎஸ்ஐ நடத்திய ஆய்வில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
- எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு ஜிஎஸ்ஐ மூலம் கண்டறியப்பட்டது.
லித்தியம் முதன்மையாக மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கு ரிச்சார்ஜபிள் பேட்டரிகளில் பயன்படுத்தப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் தெகானாவில் லித்தியம் இருப்பு குறித்து GSI அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிடுவதற்கு முன்பே அமைச்சர் இவ்விதமாகத் தெரிவித்திருப்பதால் ஊடகங்களில் அந்தச் செய்தி
பரபரப்பானதும் கூட தேசிய அரசியலில் ஒரு பகுதியாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை பொதுமக்களிடையே எழுப்பி இருக்கிறது.