மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை! தமிழக எம்பிக்கள் ஆவேசம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை! தமிழக எம்பிக்கள் ஆவேசம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு நிதியாண்டுக்கான கடைசி பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். நாட்டின் வரவு செலவு குறித்து 2023-2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பல்வேறு விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுமார் 90 நிமிடங்கள் நிதிநிலை அறிக்கை வாசித்ததார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன .இந்தப் பட்ஜெட் அறிக்கையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்
பட்ஜெட்

ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து நாடாளுமன்ற தமிழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில், செங்கல்லை ஏந்தியவாறு தமிழ்நாட்டு எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, கையில் AIIMS என்று எழுதப்பட்ட செங்கல் ஏந்தி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து தமிழ்நாட்டு எம்.பிக்களான மாணிக்கம் தாக்கூர், கார்த்தி சிதம்பரம், விஜய்வசந்த், செல்லக்குமார், ஞானதிரவியம், சு.வெங்கடேசன், நவாஸ்கனி உள்ளிட்டோர் முழக்கங்கள் எழுப்பினர்.

ஏற்கனவே மதுரை எய்ம்ஸ் குறித்த பல்வேறு சர்ச்சைகளை தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கிளப்பி வருவது அனைவரும் அறிந்ததே. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கைகளில் செங்கலை உயர்த்தி பிடித்தபடி மேடைகளில் எய்ம்ஸ் செங்கல் என கிண்டல்கள் கேலிகள் செய்தது என சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. தற்போது மதுரை எய்ம்ஸில் சுற்று சுவர் மட்டுமே எழுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழகத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி வருகிறது. இந்த நிலையில் , மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com