மகாராஷ்டிரம்: தார்ச்சாலையா? தரை விரிப்பா?

மகாராஷ்டிரம்: தார்ச்சாலையா? தரை விரிப்பா?

மகாராஷ்டிரத்தில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையை கிராம மக்கள் தரை விரிப்புபோல் கையில் எடுக்கும் விநோதமாக காட்சி சமூக வலைத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விடியோவில் மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலை தரைவிரிப்பு போல் இருக்க அதை கிராம மக்கள் எளிதில் போர்வை போல் கையிலெடுக்கின்றனர். உள்ளூர் ஒப்பந்தார் ஒருவர் அந்த சாலையில் தார் போட்டுள்ளார். அந்த மோசமான சாலையை போட்டவர் பெயர் ரானா தாகுர் என்பது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்பாட் தாலுகாவில் கர்ஜத்-ஹஸ்ட் போகாரி என்ற இடம் தான் இப்படி தரைவிரிப்பு தார்ச்சாலையாக காட்சியளிக்கிறது. இந்த சாலை பிரதமரின் ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் போடப்பட்டுள்ளது.

இந்த தார்ச்சாலை ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போடப்பட்டுள்ளதாக அந்த ஒப்பந்ததாரர் தெரிவிக்கிறார். ஆனாலும் தார்ச்சாலையை முறையாக போடாமல் மோசடியாக போட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி தார்ச்சாலையை தரைவிரிப்பு சாலையாக மோசமாக போட்டுள்ள ஒப்பந்ததாரர் மற்றும் என்ஜினியர் மீது மகாராஷ்டிர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரியுள்ளனர்.

இந்தியாவில் 63.32 லட்சம் கி.மீ. தொலைவுக்கு சாலைகள் உள்ளன. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை பல்வேறு ஏஜென்சிகள் மூலம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய மாநில அரசுகளின் பொதுப் பணித்துறை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம் உள்ளிட்டவை இப்பணியில் ஈடுபட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com