மலப்புரம் படகு விபத்து - உயரும் பலி எண்ணிக்கை!

மலப்புரம் படகு விபத்து - உயரும் பலி எண்ணிக்கை!

கேரள மாநிலம் மலப்புரத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது. இதுவரை 22க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தூவல் தீரம் என்னுமிடத்தில் சுற்றுலாத்தளம் உள்ளது. கடலூண்டி ஆறு, அரேபியக்கடலில் கலக்கும் இடம். இங்கே படகு போக்குவரத்து பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது கோடைவிடுமுறை என்பதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகரித்திருக்கிறது. தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு ஏராளமான சொகுசு படகுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் அனுமதிக்கப்பட்டவர்களை தாண்டி அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பந்தப்பட்ட படகில் 40 பேர் வரையில் பயணித்ததாக கூறப்படுகிறது. 25 பேர் வரையில் மட்டுமே ஏற்ற வேண்டிய படகில் 40 பேர் வரை ஏற்றியதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு வரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 4 பேர் குழந்தைகள் ஆகும்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், படகு விபத்தால் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 20 பேர் மீட்கப்பட்டு அருகே உள்ள வெவ்வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கேரளா போன்ற சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் மாநிலங்களில் சுற்றுலாத் தளங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்திருக்கிறார்கள். குறிப்பாக படகுகளை இயக்குவதில் பல நெறிமுறைகளை பின்பற்றவேண்டும் என்று கோரிக்கைகளி விடப்பட்டாலும் அரசு தரப்பிலிருந்து இதுவரை கடுமையான விதிமுறைகள் எதுவும் விதிக்கப்பட்டதில்லை.

இரவு நேரத்தில் மீட்பு பணியை தொடர்வதில் சவால்கள் இருக்கின்றன. இது குறித்து இரங்கல் செய்தியை பதிவு செய்துள்ள பிரதமர் மோடி, கேரளா மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்து, அப்பாவி மக்கள் உயிரிழந்தது அதிர்ச்சியடைய வைக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

விபத்து நடந்த பகுதிக்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜய் நேரில் சென்று பார்வையிட்டார். அதேபோல் படகு விபத்தில் மீட்கப்பட்டு திருரங்கடி தாலுகா மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் அறுதில் கூறினார். மலப்புரம் படகு விபத்து காரணமாக இன்று கேரளாவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com