ஆக்ரோஷத்துடன் மோதிக் கொண்ட ஆண் யானைகள்!

ஆக்ரோஷத்துடன் மோதிக் கொண்ட ஆண் யானைகள்!

யானைகள் என்றாலே பெருத்த உடலும், நீண்ட துதிக்கை, பெரிய தந்தங்கள்தான் நமது நினைவுக்கு வரும். யானைகள் பார்ப்பதற்கு பெரிய உருவமாக இருந்தாலும், அவை மக்களிடம் நல்லவிதமாகவே நடந்து கொள்ளும். யானைப்பாகன் சிறிய உருவத்தில் இருந்தாலும், அவனது சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும்.

யானைக்கு மனிதர்களை கவர்ந்திழுக்கும் தன்மை உண்டு. பலவிதமான வேடிக்கைகளை செய்து குழந்தைகளை மகிழ்விக்கும். யானைக்கு புத்திகூர்மை என்று சொல்லுவார்கள். எனினும் சில சமயங்களில் யானை தனது கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.

சமீபத்தில் வெளிவந்துள்ள ஒரு விடியோவில் பெரிய தந்தங்களை உடைய இரண்டு ஆண் யானைகள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் காட்சி வைரலாக வெளிவந்துள்ளது. இதை பார்த்தவர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்கள்.

இந்திய வனத்துறை அதிகாரியான சாகேத் படோலா என்பவர் இந்த விடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த விடியோவில் இரண்டு யானைகளும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி ஆக்ரோஷத்துடன் சண்டையிடுவதை காண முடிகிறது. ஒரு யானை மற்றொரு யானையை முட்டித்தள்ளிவிட முயல்கிறது. வனப்பகுதியில் நான்கு சக்கர வாகனத்திலிருந்து இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

“வலிமையான இரண்டு யானைகள் ஆக்ரோஷத்துடன் மோதிக் கொள்ளும் காட்சி” என்று அந்த விடியோவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு யானைகள் ஆக்ரோஷத்துடன் மோதிக் கொள்வது வலைத்தள பயனாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், அவை எதற்காக மோதிக் கொள்கின்றன என்று தெரியவில்லை. இந்த விடியோவை 37 ஆயிரத் பேர் பார்வையிட்டுள்ளனர். 463 பேர் லைக்ஸ் போட்டுள்ளனர். 74 பேர் ரீ டுவிட் செய்துள்ளனர்.

இரண்டு யானைகள் மோதிக்கொள்வது கம்பீரம்தான் என்றாலும் ஒருவிதத்தில் சண்டை பயங்கரமாக இருந்தது என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். யானைகள் ஆக்ரோஷத்துடன் மோதிக் கொள்ளும் காட்சியை துணிச்சலுடன் படம் பிடித்த புகைப்பட கலைஞருக்கு சல்யூட் என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

‘அடக் கடவுளே… உங்களுக்குள்ளும் சண்டையா’ என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். எதற்காக அவை இரண்டும் ஆக்ரோமாக மோதிக் கொள்கின்றன என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். யானைகள் மோதிக்கொண்டால் யாருக்கு வலிக்கும். பாவம் புற்களுக்கும், மண்ணுக்கும்தான் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் என்பவர், இரண்டு குட்டி யானைகள் சண்டையிடுவதுபோல் விளையாடி மகிழ்ந்ததை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com