அமர்த்தியா சென்னுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி போராட்டத்துக்கு அழைப்பு!

அமர்த்தியா சென்னுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி போராட்டத்துக்கு அழைப்பு!

மேற்கு வங்க மாநிலம், சாந்தி நிகேதன் பகுதியில் அமைந்துள்ளது நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் வீடு. இதே பகுதியில் மத்திய அரசின் விஸ்வ பாரதி பல்கலைக்கழகமும் அமைந்துள்ளது. பல வருடங்களாக இந்தப் பகுதியில் வசித்து வரும் அமர்த்தியா சென்னின் வீடு 1.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் அமைந்திருக்கிறது. இந்த வீடு விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தால் அமர்த்தியா சென்னின் தந்தைக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமர்த்தியா சென் தனது வீட்டுக்கு அருகே உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழத்துக்குச் சொந்தமான 5,662 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டாதாகப் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, அமர்த்திய சென் தனது வீட்டை பதினைந்து நாட்களில் காலி செய்ய வேண்டும் என்று விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

பல்கலைக் கழகத்தின் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்த அமர்த்தியா சென், 5,662 சதுர அடி நிலம் தமது தந்தையால் வாங்கப்பட்டது என்றும், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த விவகாரம் கடந்த சில நாட்களாகவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, 'அமர்த்தியா சென் வீடு முன்பு மேற்கு வங்க மாநில அமைச்சர்கள் தர்ணாவில் ஈடுபட வேண்டும். பல்கலைக் கழக அதிகாரிகள் புல்டோசர்களைக் கொண்டு வந்தாலும் அந்த இடத்தை விட்டு நகராதீர்கள்' என அமர்த்தியா சென்னுக்கு ஆதரவாக தனது அமைச்சர்களைப் போராட்டத்துகு அழைப்பு விடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com