மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

நாளை சென்னை வருகிறார் மம்தா பானர்ஜி!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நாளை சென்னை வரவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின்  பொறுப்பு ஆளுநராகவும் மணிப்பூர் மாநில ஆளுநராகவும் பதவி வகிக்கும் இல.கணேசன் இல்லத்தின் விழாவில் கலந்து கொள்வதரற்காக மம்தா நாளை சென்னை வருகிறார்.

நாளை மறுநாள் இல. கணேசனின்  அண்ணன் எல்.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா சென்னையில் கொண்டாடப் படுகிறது. இதில் பங்கேற்க வருமாறு மம்தா பானர்ஜிக்கு, இல.கணேசன் அழைப்பு விடுத்த நிலையில், அந்த விழாவில் பங்கேற்பதற்காக மம்தா நாளை மாலை சென்னை வருகிறார்.

அந்த வகையில் சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சில அரசியல் கட்சித் தலைவர்களை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நாளை மாலை தமிழகத்துக்கு வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேச உள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com