சோஷியல் மீடியாவில் மார்க்கெட்டிங்கா? உஷாரா இருங்க!

சோஷியல் மீடியாவில் மார்க்கெட்டிங்கா? உஷாரா இருங்க!

சோஷியல் மீடியாவில் ஏதாவது தடாலடியாக பேசி பிரபலமாகிவிட்டு, பின்னர் அந்த பிரபலத்தை வைத்து பணமாக்க நினைப்பவர்களுக்கு இதுவொரு கெட்ட செய்தி. முன்பின் அறிமுகமில்லாதவர்களின் பொருட்களை, அதன் தரம் தெரியாமல் விளம்பரப்படுத்தினால் இனி அபராதம் உண்டு. அபராதம் கட்டமுடியாவிட்டால் சிறைக்குச் செல்ல நேரிடும்.

சோஷியல் மீடியா மூலமாக கடை பரப்புவர்களுக்கு கடிவாளம் இடுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. சோஷியல் மீடியா செலிபரரேட்டிகளின் பிரமோஷனை கண்காணிக்கப் போகிறது. பணத்திற்காகவோ, அல்லது இலவசமாக கிடைக்கும் எதற்காகவோ ஒரு பொருளை தவறாக பிரமோஷன் செய்தால் கடும் நடவடிக்கைகள் காத்திருக்கின்றன.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019ல் படி, தவறான வழியில் விளம்பரம் செய்வதை தடுக்க சில விதிமுறைகளை கொண்டு வருப்பட இருக்கின்றன. அட்வைர்டிசிங் ஸ்டாண்டர்டு கவுன்சில் பரிந்துரைக்கும் வழிமுறைகளை பரிசீரித்த மத்திய நுகவர்வோர் விவகாரங்களுக்கான அமைச்சகம் இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

புதிய நடைமுறைகளை மீறுபவர்களுக்கு 10 லட்சம் ருபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து அதே தவறை செய்பவர்களுக்கு 50 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தவறான வழிகளில் விளம்பரம் செய்பவர்களுக்கு ஆறு மாதம் சிறைதண்டனை விதிக்கவும் இதில் வழியுண்டு.

இந்தியாவில் சோஷியல் மீடியா மார்க்கெட் என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. சோஷியல் மீடியா விளம்பரங்களின் தாக்கத்தால் சென்ற ஆண்டு 1275 கோடி ருபாய் வணிகம் உயர்ந்தது. அடுத்த வரும் இரண்டு ஆண்டுகளில் 3000 கோடிக்கு அதிகமான வணிகம் நடைபெற வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆகவே, பொருட்களின் தரம் குறித்து கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது.

இனி பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்படும்போது விளம்பரம் என்று குறி இடுவது போன்று இணையத்திலும் அதை செய்ய வேண்டியிருக்கும். வீடியோ, ஆடியோ, இமேஜ் எதுவாக இருந்தாலும் விளம்பரம் சம்பந்தப்பட்டது என்றால் அதை தனியாக அடையாளப்படுத்த வேண்டியிருக்கும்.

எப்படி அமலுக்கு கொண்டு வரப்போகிறார்கள்? இந்தியா போன்ற இணைய கட்டுப்பாடுகள் குறைந்த நாட்டில் இவற்றையெல்லாம் அமல்படுத்துவது கஷ்டமான விஷயம். பொறுத்திருந்து பார்ப்போம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com