தேசிய குவான் கி டோ தற்காப்பு கலை போட்டி: தமிழகத்துக்கு 12 பதக்கம்!

தேசிய குவான் கி டோ தற்காப்பு கலை போட்டி: தமிழகத்துக்கு 12 பதக்கம்!

டெல்லியில் நடைப்பெற்ற தேசிய அளவிலான குவான் கி டோ தற்காப்பு கலை போட்டியில் 4 தங்கம் உட்பட 12 பதக்கங்களை வென்றனர் தமிழக வீரர்கள்.

டெல்லியில் உள்ள டால்கோட்ரா மைதானத்திள் இந்த ஆண்டுக்கான குவான் கி டோ தற்காப்பு கலையின் 4-வது தேசிய அளவிலான போட்டி கடந்த  27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைப்பெற்றது. இதில், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 8 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நடந்த இப்போட்டியில் தமிழகத்திலிருந்து 17 பிரிவுகளில் 5 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 8 பேர் பங்கேற்றனர். 

மொத்தம் 3 நாட்கள் நடைப்பெற்ற இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற வீரர்கள் 4 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்று, நேற்று சென்னை திரும்பினர். அவர்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.  

இந்த போட்டி குறித்து, தமிழக அணியின் பயிற்சியாளரான பேட்டி: பிராங்கிளின் பென்னி, நம்மிடம் தெரிவித்ததாவது;

இந்த போட்டியில் 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர் அதில் தமிழக வீரர்கள் பங்குபெற்று பதக்கங்களை அள்ளியது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய அளவிலான இந்த போட்டியில் வென்றதன் மூலம் தமிழக வீரர்கள் ஆசியப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர். ஆசிய போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக வீரர்களுக்கு முதல்வர் நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

‘’எங்களுடைய விளையாட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகள் அரசாங்கத்தின் சார்பாக நிறைவேற்றினால் தேசிய அளவில் மட்டுமல்லாமல் ஒலிம்பிக் அளவில் சாதனை புரிய முடியும்’’ என்றார், தங்கம் வென்ற இன்சிகா என்ற 7- வகுப்பு மாணவி. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com