3000 க்கும் அதிகமானோர் பங்கேற்ற ஜி டெக் போதைப் பொருள் எதிர்ப்பு மராத்தான்!

3000 க்கும் அதிகமானோர் பங்கேற்ற ஜி டெக் போதைப் பொருள் எதிர்ப்பு மராத்தான்!

கேரள மாநிலத்தின் ஐடி நிறுவனங்களின் தொழில் அமைப்பான ஜிடெக் திருவனந்தபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த மாரத்தானில் அனைத்து வயது, பாலினம் மற்றும் தொழில்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 3,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், இது அரசாங்கத்தின் ‘போதையில்லா கேரளா’ பிரச்சாரத்திற்கு மேலும் வேகம் சேர்த்தது.

அதிகாலை நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் டினு யோஹன்னன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில் 21 கிமீ, 10 கிமீ மற்றும் 3 கிமீ ஓட்டம் ஆகிய மூன்று பிரிவுகள் அடங்கியிருந்தன. பங்கேற்பாளர்களில் சிலர் 80 வயதுகளிலும் கூட இருந்தார்கள், கிட்டத்தட்ட 1,000 பெண்கள் மற்றும் 100 குழந்தைகளையும் உள்ளடக்கியதாக இருந்தது அந்த மராத்தான் ஓட்டம்.

மாரத்தானின் கருப்பொருள், ‘போதையில்லா கேரளா’, மாநிலத்தில் போதைப்பொருள் பாவிப்பு பரவலானதால், அதன் தீய விளைவுகள் பற்றி, குறிப்பாக இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக இருந்தது. இந்த மாரத்தானில் பலதரப்பட்ட மனிதர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்புத்துறை சாந்து மட்டுமே சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். GTech ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர நிகழ்வின் முதல் பதிப்பின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த ஓட்டத்தில் வருங்காலத்தில் மேலும் பலர் இணையலாம் என்று தகவல்.

நிகழ்ச்சியின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு எம்பி சசி தரூர் தலைமை வகித்தார். எம்எல்ஏ கடகம்பள்ளி சுரேந்திரன், ஐடி செயலாளர் ரத்தன் கேல்கர், நகர போலீஸ் கமிஷனர் நாகராஜூ சி எச், திரைப்பட தயாரிப்பாளர் பாசில் ஜோசப், ஜிடெக் தலைவர் வி கே மேத்யூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் தரூர் பேசுகையில், “கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவிலேயே அதிகபட்சமாக கேரளாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது இளைஞர்கள், சரியான செய்தி அவர்களை சென்றடைய வேண்டும். ‘No to Drugs’ பிரச்சாரத்தை ஒரு வெகுஜன பொது இயக்கமாக மாற்ற ஐடி சமூகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com