Mulayam Singh Yadav
இந்தியா
முலாயம் சிங் யாதவ் காலமானார்!
உத்தர பிரதேச மாநிலத்தில் 3 முறை முதல்வராக பதவி வகித்த முலாயம் சிங் சிங் யாதவ் இன்று காலமானார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரான முலாயம் சிங் யாதவ் (வயது 83) கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். அவரது மகன் அகிலேஷ் யாதவும் அம்மாநில முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர். சமீபத்தில் முலாயம் சிங் யாதவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சில நாட்களாக தகவல்கள் வெளியான நிலையில் இன்று காலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.