திருப்பதி கோயிலுக்கு இஸ்லாமியர் ரூ 1.02 கோடி நன்கொடை!

திருப்பதி கோயிலுக்கு இஸ்லாமியர் ரூ 1.02 கோடி நன்கொடை!

சென்னையைச் சேர்ந்த சுபினாபானு மற்றும் அப்துல் கனி ஆகிய இஸ்லாமியர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 1.02 கோடி நன்கொடையாக வழங்கினர்.

 -இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவித்ததாவது;

 சென்னையைச் சேர்ந்த சுபினாபானு மற்றும் அப்துல் கனி ஆகிய இஸ்லாமியர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 1.02 கோடி நன்கொடைகான காசோலையை ஏழுமலையான் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் செயலதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்கினர்.

இதில், எஸ்.வி.அன்னப்பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.15 லட்சமும், திருமலையில் சமீபத்தில் நவீனப்படுத்தப்பட்ட  பத்மாவதி ஓய்வறையில் ரூ. 87 லட்சத்தில் புதிய மரச்சாமான்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் வாங்குவதற்கும் தரப்பட்டது.

 -இவ்வாறு தெரிவிக்கப் பட்டது.

 இந்த இஸ்லாமிய பக்தர் ஏற்கனவே பலமுறை ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு நன்கொடைகளை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com