நேஷனல் கேரியர் சர்வீஸ் - நாடு தழுவிய அளவில் தயாராகும் இந்தியாவிற்கான டிஜிட்டல் வேலைவாய்ப்பு அலுவலகம்!

நேஷனல் கேரியர் சர்வீஸ் - நாடு தழுவிய அளவில் தயாராகும் இந்தியாவிற்கான டிஜிட்டல் வேலைவாய்ப்பு அலுவலகம்!

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேலைவாய்ப்புகளை முறைப்படுத்துவதற்காக நாடெங்கிலும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களின் நடைமுறைகளை மத்திய அரசு மாற்றியமைத்தது. நேஷனல் கேரியர் சர்வீஸ் என்னும் புதிய திட்டம் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் இருந்த எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ச் என்னும் வேலைவாய்ப்பு அலுவலகங்களை டிஜிட்டல் தளத்திற்கு கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட சேவை, இன்று நாடு தழுவிய அளவில் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இனி வரும் காலங்களில் நேஷனல் கேரியர் சர்வீஸ் தளம், புதிதாக மேம்படுத்தப்பட இருக்கிறது.

இனி வேலை தேடுபவர்களுக்கும் வேலை தருபவர்களும், வேலைக்கான பயிற்சி தருபவர்களுக்குமான இடமாக உருவாக்கப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. திறமையான பணியாட்கள் வேண்டுமென்றாலோ, அரசுத்துறைகளில் நேரடியாகவோ அல்லது ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாற்றும் விருப்பம் இருந்தால் இனி நேஷனல் கேரியர் சர்வீஸை அணுகலாம்.

மாநில அளவில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தகவல்களையும் இனி நேஷனர் கேரியர் சர்வீஸ் மூலமாக பெறமுடியும். ஏற்கனவே 20 மாநிலங்களில் கிடைக்கும் பல்வேறு வேலை வாய்ய்புகள் பற்றிய தகவல்கள் நேஷனல் கேரியர் சர்வீஸ் தளத்தில் பெறமுடியும். ஏறக்குறைய 7 மாநிலங்கள், நேஷனல் கேரியர் சர்வீஸ் தளத்தையே நேரடியான வேலைவாய்ப்பு அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் இணையத்தளம், ஆத்மநிர்பார் (ASEEM) இணையத்தளம் தரும் தகவல்களையும் உள்ளீடாக கொண்டிருக்கும். ஸ்கில் இந்தியா இணையத்தளத்தில் உள்ள தகுதியான வேலையாட்களை இணைக்கும் பணியோடு கூடவே பணியாளர்கள், நிறுவனங்கள் உள்ளடக்கிய டைரக்டரியையும் கொண்டிருக்கும்.

நேஷனல் கேரியர் சர்வீஸ் உடன் பி.எப், இன்சூரன்ஸ் உள்ளிட்ட சேவைகளை தரும் இணையத்தளங்களும் இணைக்கப்படவிருக்கின்றன. இதன் மூலம் பணியில் இருப்பவர்களுக்கு தரப்படும் ஊதியம் இன்ன பிற சலுகைகள் பற்றிய விபரங்களை பெறும் சேவைகளும் கிடைக்கும்.

உதயம், இஷரம், என்சிஎஸ் உள்ளிட்ட தளங்களும் நேஷனர் கேரியர் சர்வீஸ் உடன் இணைக்கப்படவிருக்கின்றன. இதன் மூலம் பரந்துபட்ட அளவில் வேலைவாய்ப்பை தேடித் தளம் இடமாக அமையவிருக்கிறது. சுயதொழில் தொடங்கும் திட்டமிடுபவர்களுக்கான சேவையையும் இது அளிக்க இருக்கிறது. இதுவரை வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com